முகப்பு /தேனி /

தள்ளுவண்டிகள் கொடுத்து உதவ வேண்டும். தேனி சிறு வியாபாரிகள் கோரிக்கை!

தள்ளுவண்டிகள் கொடுத்து உதவ வேண்டும். தேனி சிறு வியாபாரிகள் கோரிக்கை!

X
மனு

மனு அளித்த சிறு வியாபாரிகள்

Theni District News | தேனி மாவட்டத்தில் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட சாலையோர சிறு வியாபாரிகள் தள்ளுவண்டிகள் கொடுத்து உதவ வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

  • News18 Tamil
  • 2-MIN READ
  • Last Updated :
  • Theni Allinagaram | Theni

தேனி மாவட்டத்தில் சாலையோரத்தில் வியாபாரம் செய்து வரும் சிறு வியாபாரிகளுக்கு தோட்டக்கலைத்துறை சார்பில் தள்ளுவண்டிகள் வழங்கப்பட்டு வரும் நிலையில், தகுதியான சிறு வியாபாரிகளுக்கு தோட்டக்கலை துறை சார்பில் தள்ளுவண்டிகள் வழங்கக் கோரி தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அமைப்புசாரா தெருவோர சிறு வியாபாரிகள் முன்னேற்றத் தொழில் சங்கம் சார்பில் மனு அளிக்கப்பட்டது.

தேனி மாவட்டம் கம்பம் பகுதியில் சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட சிறு வியாபாரிகள் சாலை ஓரங்களில் சிறிய அளவில் கடை வைத்து பிழைப்பு நடத்தி வருகின்றனர். இந்தப் பகுதியில் வசிக்கும் பெரும்பாலான சிறு வியாபாரிகள் சிறு வியாபாரிகள் சங்கத்தில் உறுப்பினராக இணைந்து செயல்பட்டு வருகின்றனர். அமைப்புசாரா சிறு வியாபாரிகளுக்காக தோட்டக்கலை துறை சார்பில் சிறு வியாபாரிகளின் வாழ்வாதாரத்தை உயர்த்தும் நோக்கத்தோடு தள்ளுவண்டிகள் வழங்கப்பட்டு வருகின்றன. ஆனால் தகுதியான சிறு வியாபாரிகளுக்கு தள்ளுவண்டிகளை வழங்க வேண்டும் என தமிழக அமைப்பு சாரா தெருவோர சிறு குறுவியாபாரிகள் சங்க மாநில தலைவர் ராசா முருகேசன், மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்துள்ளார்.

மேலும் தகுதியற்ற நபர்களை சிறு வியாபாரிகளாக கருதி தோட்டக்கலை துறை சார்பில் தள்ளுவண்டிகள் வழங்கப்படும் பொழுது அந்த தள்ளுவண்டிகள் முற்றிலும் பயனற்ற நிலையில் இருப்பதாக கூறுகிறார்

மேலும் அரசின் சார்பில் நகராட்சியில் வழங்கப்படும் தள்ளு வண்டிகளும் தகுதியான சிறு வியாபாரிகளை தேர்ந்தெடுத்து உண்மை சிறு வியாபாரிகளுக்கு தள்ளுவண்டிகள் வழங்க வேண்டுமெனவும் மனு அளித்துள்ளார்.

இது குறித்து தமிழகத் தெருவோர சிறு வியாபாரிகள் சங்கத்தின் மாநில தலைவர் ஆன ராசா முருகேசன் கூறுகையில், தமிழகத்தில் லட்சத்திற்கும் அதிகமான உறுப்பினர்களை கொண்டது இந்த தமிழக அமைப்பு சாரா தெரு (ஓர) சுமை சிறு - குறு வியாபாரிகள் சங்கம். இந்த அமைப்பானது தமிழகத்தில் உள்ள அணைத்து மாவட்டங்களிலும் செயல்படுகிறது. வெவ்வேறு வியாபாரிகள், வணிகர்களுக்கு வெவ்வேறு சங்கங்கள் இருந்தாலும் அணைத்து வியாபாரிகளும் ஒருங்கிணைந்தது இந்த சங்கம். சாலை ஓரங்களிலும், தெருக்களிலும், தலையில் சுமைத் தூக்கி விற்பனை செய்யும் வியாபாரிகள் என சிறிய அளவில் வர்த்தகம் செய்வோருக்கானச் சங்கம் இது. GST கட்டாமல் தொழில் செய்யும் சிறிய வியாபாரிகளுக்கானது இந்த சங்கம்.

தேனி மாவட்டத்தில் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட சாலையோர சிறு வியாபாரிகள் சிறு வியாபாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். வறுமை கோட்டுக்கு கீழ் உள்ள சிறு வியாபாரிகள் அன்றாட வியாபாரத்தை நம்பி பிழைப்பு நடத்தி வருகின்றனர்.

சாலையோர வியாபாரிகளுக்கு தோட்டக்கலை துறை சார்பில் குறைந்த எண்ணிக்கையிலான தள்ளு வண்டிகளே வழங்கப்பட்டு வருகிறது. தேனி மாவட்டத்தில் உள்ள ஊராட்சி ஒன்றியம் வாரியாக சாலையோர வியாபாரிகளை முழுமையாக கணக்கெடுத்து போதிய எண்ணிகையில் தள்ளுவண்டிகளை வழங்க வேண்டுமென தமிழக சாலையோர சிறு வியாபாரிகள் சங்கத் தலைவர் ராசா முருகேசன் கூறியுள்ளார்.

மேலும் தகுதியான நபர்களை தேர்ந்தெடுத்து சிறு வியாபாரிகளுக்கு தள்ளு வண்டிகளை வழங்க வேண்டும் எனவும் , அரசின் சார்பில் சிறு வியாபாரிகளுக்கு தள்ளுவண்டிகள் வழங்குவதற்கு கம்பம் நகராட்சி சார்பில் கமிட்டி அமைத்தது போல தேனி மாவட்டத்தில் உள்ள அனைத்து நகராட்சிகளிலும் கமிட்டி அமைத்து தகுதியான சிறு வியாபாரிகளுக்கு தள்ளுவண்டி வழங்கிட முயற்சி எடுக்க வேண்டும் எனவும் தெரிவித்தார்.

First published:

Tags: Local News, Theni