முகப்பு /தேனி /

தேனி அல்லிநகரம் தனியார் பள்ளியில் சிறுதானிய உணவு திருவிழா

தேனி அல்லிநகரம் தனியார் பள்ளியில் சிறுதானிய உணவு திருவிழா

X
சிறுதானிய

சிறுதானிய திருவிழா  

Theni Small grain food festival | நாகரீக காலத்தில் நாம் மறந்த பண்டைய கால உணவு முறைகளை நினைவுபடுத்தும் வகையில் பல்வேறு உணவு வைக்கப்பட்டன.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Theni, India

தேனி மாவட்டம் அல்லிநகரம் பகுதியில் செயல்பட்டு வரும் தனியார் மெட்ரிக் பள்ளியில் சர்வதேச சிறுதானிய ஆண்டை முன்னிட்டு சிறுதானிய உணவு திருவிழா நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் 500க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் கலந்து கொண்டு சிறுதானியங்கள் பற்றிய முக்கியத்துவத்தைப் பார்வையாளர்களுக்கு விளக்கினர்.

சிறுதானிய உணவு கண்காட்சி :-

ஐக்கிய நாடுகள் சபை பிரதமரின் பரிந்துரையை ஏற்று 2023-ஆம் ஆண்டை சர்வதேச சிறுதானிய ஆண்டாக அறிவித்தது. இதன் அடிப்படையில் சிறுதானியங்கள் பற்றிய முக்கியத்துவத்தை எடுத்துரைக்க அரசின் சார்பில் பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. விவசாயிகள் சிறுதானியங்களை விளைவிக்கவும், பொதுமக்கள் சிறு தானியங்கள் பயன்கள் மற்றும் முக்கியத்துவத்தை அறிந்து கொள்ளும் வகையில் பள்ளி மற்றும் கல்லூரிகளில் சிறப்பு நிகழ்ச்சிகளும் விழிப்புணர்வும் ஏற்படுத்தப்பட்டு வருகிறது.

அந்த வகையில் தேனி மாவட்டம் அல்லி நகரம் பகுதியில் உள்ள தனியார் மெட்ரிகுலேஷன் பள்ளியில் பள்ளி முதல்வர் பரந்தாமன் தலைமையிலும் வேளாண் துறை துணை இயக்குனர் முன்னிலையிலும் சிறுதானிய உணவு திருவிழா நடைபெற்றது.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

இந்த நிகழ்ச்சியில் நாகரீக காலத்தில் நாம் மறந்த பண்டைய கால உணவு முறைகளை நினைவுபடுத்தும் வகையில் பல்வேறு நோய் எதிர்ப்புக் குணாதிசயங்கள் உடைய உணவு சிறுதானிய பொருட்கள் காட்சிப்படுத்தப்பட்டிருந்தது. அதுபோல ஆரோக்கியம் மிகுந்த உணவு பழக்க வழக்கங்களை மேற்கொள்வது தொடர்பாகவும் தெளிவாக எடுத்துரைக்கப்பட்டது. இந்தச் சிறுதானிய உணவு திருவிழா நிகழ்ச்சியைப் பள்ளி மாணவர்கள் பெற்றோர்கள் பொதுமக்கள் உள்ளிட்ட ஏராளமானோர் பார்வையிட்டு சென்றனர்.

First published:

Tags: Local News, Theni