தேனி மாவட்டம் காமாட்சிபுரம் பகுதியில் அமைந்துள்ள சென்டெக்ட் வேளாண் அறிவியல் மையம் மற்றும் ஐ.சி.ஏ.ஆர் தேசிய தோட்டக்கலை ஆராய்ச்சி நிறுவனம் இணைந்து சின்னமனூர் சுற்றுவட்டாரத்தில் உள்ள பட்டியலினத்தவர்களுக்கு நிலையான வருமானம் உருவாக்குவதற்காக அறிவியல் ரீதியான கோழி வளர்ப்பு மற்றும் தேசிய தோட்டக்கலை ஆராய்ச்சி தொழில்நுட்பங்கள் பற்றிய திறன் மேம்பாட்டு பயிற்சி சின்னனூர் சுக்காங்கல்பட்டி அம்பேத்கர் காலனி பகுதியில் நடத்தப்பட்டது.
பட்டியலினத்தை சேர்ந்தவர்களுக்கு நிலையான வருமானத்தை பெருக்குவதற்காக அறிவியல் ரீதியான கோழி வளர்ப்பு சம்பந்தமான தொழில் நுட்பம் மற்றும் விழிப்புணர்வும், தேசிய தோட்டக்கலை ஆராய்ச்சி நிறுவனத்தின் தொழில் நுட்பங்கள் பற்றி விரிவாக விவசாயிகளுக்கு எடுத்துரைக்கப்பட்டது.
காய்கறிகள் பழங்கள் சாகுபடியில் விவசாயிகள் செய்ய வேண்டிய எளிய தொழில்நுட்பம் பற்றியும், விவசாயிகள் பழ சாகுபடியில் சந்திக்கும் சிக்கல்களுக்கு தீர்வு அளிக்கும் விதமாக இந்த முகாம் நடைபெற்றது.
தேசிய தோட்டக்கலை ஆராய்ச்சி நிலையத்தின் முதன்மை விஞ்ஞானிகளான சங்கர், புவனேஸ்வரி, செந்தில்குமார் ஆகியோர் கலந்து கொண்டு , தேசிய தோட்டக்கலை ஆராய்ச்சி தொழில்நுட்பங்களான புதிய பழரகங்கள் மற்றும் அறுவடைக்கு பின்னர் செய்யப்பட வேண்டிய தொழில்நுட்பங்கள் குறித்தும் , காய்கறிகளில் புதிய ரகங்கள், மற்றும் பழங்கள், காய்கறிகளை கழுவும் தொழில்நுட்பங்கள் பற்றியும் ,
கீரைகளின் வாழ்நாளை நீட்டிப்பதற்காக அர்கா உயர் ஈரப்பதம் சேமிப்பு பெட்டியின் செயல் விளக்கம் மற்றும் குறைந்த விலையில் பழங்களை பழுக்க வைக்கும் தொழில்நுட்பங்கள் பற்றியும் இந்த பயிற்சி முகாமில் விரிவாக எடுத்துரைக்கப்பட்டது .
மேலும் தேனி உழவர் பயிற்சி மையத்தின் இணை பேராசிரியர் மற்றும் தலைவர் கால்நடை மருத்துவர் செந்தில்குமார் அறிவியல் ரீதியாக லாபகரமான கோழி வளர்ப்பு தொழில் நுட்பங்கள் பற்றி பயிற்சி அளித்தார்.
மேலும் இந்த நிகழ்ச்சியில் கீரைகளின் வாழ்நாளை நீட்டிப்பதற்கான அர்கா உயர் இரப்பதம் சேமிப்பு பட்டகம் , பழங்களைப் பழுக்க வைக்கும் பெட்டகம் , பழங்கள் பறிக்கும் கருவிகள் காய்கறிகள் மற்றும் கீரை விதைகள் போன்ற இடுபொருள்கள் குறைந்த விலையில் வழங்கப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் சென்டெக்ட் வேளாண் அறிவியல் மையத்தின் திட்ட ஒருங்கிணைப்பாளர் மகேஸ்வரன், சேர்மன் முனைவர் பச்சையம்மால், தொழில்நுட்ப வல்லுனர் ரம்யா சிவசெல்வி , காமாட்சிபுரம் பஞ்சாயத்து தலைவர் அழகுமுத்து ஆசியோர் கலந்துகொண்டனர்.
உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க
இந்த முகாமில் சின்னமனூர், தேனி கம்பம் , அதன் சுற்றுவட்டார பகுதியைச் சேர்ந்த 50-க்கும் மேற்பட்ட பட்டியல் இனத்தைச் சேர்ந்த பொதுமக்கள் கலந்துகொண்டனர்.
இதுகுறித்து முகாமில் கலந்து கொண்ட நபர்கள் கூறுகையில் அறிவியல் தொழில்நுட்பத்துடன் விவசாயம் செய்வதற்கான தொழில் முறைகளை எளிதாக கற்றுக் கொண்டதாக கூறினர்.
செய்தியாளர் : சுதர்சன் - தேனி
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Local News, Theni