ஹோம் /தேனி /

தேனியில் சுயதொழில் தொடங்க விருப்பமா? - இந்த திறன் மேம்பாட்டு பயிற்சியை மிஸ் பண்ணாதீங்க

தேனியில் சுயதொழில் தொடங்க விருப்பமா? - இந்த திறன் மேம்பாட்டு பயிற்சியை மிஸ் பண்ணாதீங்க

திறன் மேம்பாட்டு பயிற்சி

திறன் மேம்பாட்டு பயிற்சி

Theni District | தேனி மாவட்டம் காமாட்சிபுரத்தில் உள்ள சென்டெக்ட் வேளாண் அறிவியல் மையத்தில் தொழில்முனைவோருக்கு திறன் மேம்பாட்டு பயிற்சி அளிக்கப்பட இருப்பதாகவும் அது குறித்த விவரங்களும் வெளியிடப்பட்டுள்ளன.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Theni, India

தேனி மாவட்டம் சின்னமனூர் அருகே உள்ள காமாட்சிபுரத்தில் செயல்படும் சென்டெக்ட் வேளாண் அறிவியல் மையத்தில், பெண்கள் மற்றும் தொழில்முனைவோருக்கு பல்வேறு திறன் மேம்பாட்டு பயிற்சி வழங்கப்படுகிறது.

அதன்படி, தொழில்முனைவோர்களை உருவாக்கும் திறன் மேம்பாட்டு பயிற்சிகள் வருகிற 20ஆம் தேதி தொடங்கி, பிப்ரவரி 10ஆம் தேதி வரை நடக்கிறது. அதன்படி, திராட்சையில் மதிப்புக்கூட்டும் பொருட்கள் தயாரிப்பு பயிற்சி வருகிற 20, 21ஆம் தேதிகளிலும், முருங்கை மற்றும் காய்கறி பொருட்களில் மதிப்புக்கூட்டும் பொருட்கள் தயாரிப்பு பயிற்சி 27, 28ஆம் தேதிகளிலும் நடக்கிறது.

வாழையில் இருந்து மதிப்புக்கூட்டும் பொருட்கள் தயாரித்தல் மற்றும் தொழில்நுட்ப பயிற்சி ஜனவரி 31, பிப்ரவரி 1 ஆகிய தேதிகளில் நடக்கிறது. தென்னை மற்றும் தானியங்களில் இருந்து மதிப்புக்கூட்டும் பொருட்கள் தயாரிப்பு பயிற்சி 7, 8ஆம் தேதிகளில் நடக்கிறது. மா சாகுபடி மற்றும் மதிப்புக்கூட்டும் பொருட்கள் தயாரிப்பு பயிற்சி 9, 10ஆம் தேதிகளிலும் நடக்கிறது.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

இந்த பயிற்சி காலை 9.30 மணி முதல் மாலை 5 மணி வரை நடக்கும். பயிற்சி கட்டணம் ரூ.200. பயிற்சி முடித்தவுடன் சான்றிதழ் வழங்கப்படும். அரசு மானியம் பெற வழிவகை செய்வதோடு, வங்கிக்கடன் பெற சென்டெக்ட் ஈட்டுறுதி கடன் வழங்கப்படும்.

Must Read : புதுக்கோட்டை மாவட்டத்திற்கு ஹேப்பி பர்த்டே... 49ஆவது ஆண்டில் அடி எடுத்து வைக்கிறது - சிறப்புகள் என்ன?

பயிற்சியில் சேர cendect@gmail.com என்ற மின்னஞ்சல் மூலம் முன்பதிவு செய்ய வேண்டும் என சென்டெக்ட் வேளாண் அறிவியல் மைய தலைவர் பச்சைமால் தெரிவித்தார்

First published:

Tags: Entrepreneurship, Local News, Theni, Training