Home /theni /

34 வருடமாக இலவச சிலம்பப் பயிற்சி.. சிலம்ப கலையை காக்க சின்னமனூர் புலித்தேவன் சிலம்ப பயிற்சி பள்ளியின் அளப்பரிய முயற்சி..

34 வருடமாக இலவச சிலம்பப் பயிற்சி.. சிலம்ப கலையை காக்க சின்னமனூர் புலித்தேவன் சிலம்ப பயிற்சி பள்ளியின் அளப்பரிய முயற்சி..

சின்னமனூர்,

சின்னமனூர், இலவச சிலம்ப பயிற்சி

Theni Chinnamanur : தேனி மாவட்டம் சின்னமனூர் பகுதியில் புலித்தேவன் சிலம்பப் பயிற்சி பள்ளியில் 34 வருடமாக இலவசமாக பள்ளி மாணவ மாணவிகளுக்கு சிலம்ப பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Theni Allinagaram | Theni
தேனி மாவட்டம் சின்னமனூர் பகுதியில் கடந்த 34 வருடங்களாக இயங்கி வருகிறது புலித்தேவன் சிலம்ப பயிற்சி பள்ளி. இந்த பள்ளியின் சிலம்பம் ஆசிரியரான ரத்தினம் பத்தாயிரத்திற்கும் அதிகமான மாணவர்களுக்கு சிலம்ப பயிற்சி அளித்து, அவர்களை பல்வேறு போட்டிகளிலும் பங்கு பெறச் வைத்து பரிசு கோப்பைகளையும் வெல்ல காரணமாக இருந்து அசத்தியுள்ளார்.

அழிந்துவரும் சிலம்பக் கலையை மீட்டெடுக்க ஒருசிலரே முயற்சித்து வரும் நிலையில், தேனி மாவட்டத்தில் உள்ள மாணவர்கள் சிலம்பக் கலையை கற்றுக்கொள்ள வேண்டும் என்பதற்காக கடந்த 34 வருடங்களாக 5 வயதிற்கு மேற்பட்ட பள்ளி மாணவ மாணவிகளுக்கு சிலம்பப் பயிற்சியினை இலவசமாக அளித்து அசத்தி வருகிறார் ரத்தினம்.

சின்னமனூர், புலித்தேவன் சிலம்ப பயிற்சி பள்ளி


மாணவர்கள் பள்ளி முடிந்து வரும் மாலை வேளையிலும், சனி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் காலை மற்றும் மாலை ஆகிய இரு வேளைகளிலும், தேர்வு விடுமுறை நாட்களிலும் மாணவ மாணவிகளுக்கு இலவசமாக சிலம்ப பயிற்சி அளித்து வருகிறார் இவர்.

சின்னமனூர், புலித்தேவன் சிலம்ப பயிற்சி பள்ளி


சிலம்ப ஆசிரியரான ரத்தினத்திடமிருந்து இதுவரை சுமார் பத்தாயிரத்திற்கும் அதிகமான மாணவர்கள் சிலம்பக் கலையை கற்று சர்வதேச அளவிலான போட்டிகளிலும் பங்கு பெற்ற வெற்றிகளை குவித்து வந்துள்ளனர். மேலும் இவரிடம் பயிற்சி பெற்றுவர்கள் பலரும் சிலம்பப் பயிற்சியாளராக உருவெடுத்தும் உள்ளனர்.

சின்னமனூர், புலித்தேவன் சிலம்ப பயிற்சி பள்ளி


புலி வரிசை, வாள் சிலம்பம், வேல் சிலம்பம், மான்கொம்பு சிலம்பம் , சுருள் வாள் சிலம்பம், இரட்டை சுருள்வாள் சிலம்பம், தீப்பந்தம், செயின் பந்தம் இரட்டைக் கம்பு, பெண்கள் தற்காப்புக் கலையான பிடிவரிசை, வர்மம் உள்ளிட்ட பல்வேறு கலைகளை இலவசமாக கற்பித்து வருகிறார்.

தற்காலங்களில் பெண்களுக்கு ஏற்படும் அசௌகரிய கால நிலைகளில் தங்களைத் தற்காத்துக் கொள்ள வர்மம் பிடிவரிசை ஆகிய கலைகள் கைகொடுக்கும் என்கிறார் சிலம்ப ஆசிரியர் ரத்தினம்.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

புலித்தேவன் சிலம்ப பயிற்சி பள்ளியின் வகுப்புகள் குறித்து சந்தேகங்களுக்கு ஆசிரியர் ரத்தினத்தை 99652 89849 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்..
Published by:Arun
First published:

Tags: Local News, Theni

அடுத்த செய்தி