ஹோம் /தேனி /

தேனி : சுருளி மலையில் பொதுமக்களுக்கு இலவச சித்த வைத்திய முகாம்.. ஆன்மீகவாதிகளும் பங்கேற்பு..

தேனி : சுருளி மலையில் பொதுமக்களுக்கு இலவச சித்த வைத்திய முகாம்.. ஆன்மீகவாதிகளும் பங்கேற்பு..

X
மருத்துவ

மருத்துவ முகாம்

Theni District News : தேனி மாவட்டம் கம்பம் அருகே உள்ள சுருளி அருவிப் பகுதியில் சித்த மருத்துவர் சிராஜுதீன் தலைமையில் சித்த மருத்துவ விழிப்புணர்வு மற்றும் இலவச வைத்திய முகாம் நடைபெற்றது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Theni, India

தேனி மாவட்டம் காமயகவுண்டன்பட்டி அரசு சித்த மருத்துவ அலுவலரான சிராஜுதீன் கம்பம் வட்டாரத்தில் உள்ள பல்வேறு கிராமப்புற பகுதிகளுக்கு சென்று இலவசமாக சித்த வைத்திய முகாமை நடத்தி வருகிறார். அந்த வகையில் தற்போது சுருளி மலைப்பகுதியில் வசித்து வரும் பொது மக்களுக்காக இலவச வைத்திய முகாம் மற்றும் சித்த மருத்துவ விழிப்புணர்வு முகாம்கோடிலிங்கம் தபோவனம் கல்யாண மண்டபத்தில் நடைபெற்றது.

சுருளி மலை பகுதியில் ஏராளமானஆன்மீகவாதிகள்வசித்து வருகின்றனர். மேலும் சுருளி மலைப்பகுதியில் வசித்து வரும் பொதுமக்கள் பெரும்பாலும் உடல் சார்ந்த பிரச்சனைகளுக்கு சித்த வைத்திய முறையிலேயே சிகிச்சை பெறுவதை விரும்புகின்றனர்.

ஆகையால் சுருளி மலை பகுதியில் வசித்து வரும் பொது மக்களுக்கு இலவச சித்த வைத்திய முகாம் நடத்த முடிவு செய்யப்பட்டதாக சித்த மருத்துவ அலுவலர் சிராஜுதீன் கூறினார்.

இதையும் படிங்க : தேனி குமுளி மலைச்சாலையில் கார் கவிழ்ந்து கோர விபத்து.. ஐயப்ப பக்தர்கள் 8 பேர் பலியான சோகம்

சிவசக்தி விஸ்வ பிரம்மா அறக்கட்டளை, மூலிகை பண்ணை ஆராய்ச்சி இயக்கம் மற்றும் காமய கவுண்டன்பட்டி அரசு ஆரம்ப சுகாதார நிலையம் சார்பில் நடத்தப்பட்ட இந்த இலவச சித்த வைத்திய முகாமில் 100க்கும் மேற்பட்ட பொதுமக்களும் ஆன்மீகவாதிகளும் கலந்து கொண்டு சிகிச்சை பெற்றனர்.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

இந்த சித்த வைத்திய முகாமில் மூட்டு வலி சர்க்கரை நோய் இரத்த கொதிப்பு சரும நோய்கள், மூலம்போன்ற பல்வேறு வகையான நோய்களுக்கு சிறப்பு மருத்துவ பரிசோதனை நடத்தப்பட்டு, வியாதிகளுக்கு ஏற்றார் போல் இலவச சித்த மருந்துகளும் வழங்கப்பட்டது.

மேலும் இந்த முகாமில் சுருளி மலைப்பகுதியில் வசிக்கும் பொது மக்கள், சுருளிப்பட்டி பகுதி மக்கள் என நூற்றுக்கும் மேற்பட்ட பொதுமக்களும் கலந்துகொண்டனர்.

செய்தியாளர் : சுதர்சன் - தேனி

First published:

Tags: Local News, Theni