ஹோம் /தேனி /

ரூ.5 லட்சத்தில் நடிகர் அஜித்துக்கு மெழுகு சிலை வைத்த தேனி வீரம் காளிதாஸ்

ரூ.5 லட்சத்தில் நடிகர் அஜித்துக்கு மெழுகு சிலை வைத்த தேனி வீரம் காளிதாஸ்

X
அஜித்தின்

அஜித்தின் மெழுகு சிலை

Theni District News : நடிகர் அஜித்தின் 61வது திரைப்படமான துணிவு திரைப்படம் வெற்றி பெற தனது உணவகத்தில் ஐந்து லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் பைப்ரல் ஆன நடிகர் அஜித்தின் மெழுகு சிலையை திறந்துள்ளார் தேனி மாவட்டம் சின்னமனூர் பகுதியைச் சேர்ந்த காளிதாஸ் என்ற நபர்.

மேலும் படிக்கவும் ...
  • Local18
  • 3 minute read
  • Last Updated :
  • Theni, India

நடிகர் அஜித்தின் சிலையை திறந்த ரசிகர் துணிவு திரைப்படம் வெளியாகும்போது ரசிகர்களுக்கு இலவசமாக அன்லிமிடெட் உணவு வழங்குவதாக தெரிவித்துள்ளார்.

நடிகர் அஜித்தின் 61வது திரைப்படமான துணிவு திரைப்படம் வெற்றி பெற தனது உணவகத்தில் ஐந்து லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் பைப்ரல் ஆன நடிகர் அஜித்தின் மெழுகு சிலையை திறந்துள்ளார் தேனி மாவட்டம் சின்னமனூர் பகுதியைச் சேர்ந்த காளிதாஸ் என்ற நபர்.

வீரம் உணவகம் :

தேனி மாவட்டம் சின்னமனூர் பகுதியில் வீரம் உணவகம் ஒன்றை நடத்தி வருகிறார் காளிதாஸ் என்னும் நபர். கம்பம் தேனி தேசிய நெடுஞ்சாலையில் சின்னமனூர் அருகே அமைந்துள்ள வீரம் உணவகம் இரண்டாவது கிளையில் நடிகர் அஜித்தின் உருவ சிலையை திறந்து அஜித் ரசிகர்களை ஆச்சரியப்பட வைத்துள்ளார்.

தீவிர அஜித் ரசிகரான காளிதாஸ் ஏற்கனவே அஜித் நடித்த வலிமை படம் வெளியானபோதும் தனது உணவகத்திற்கு வரும் வாடிக்கையாளர்களுக்கு அதிக அளவில் ஆஃபர்கள் கொடுத்து அசத்தி இருந்தார்.

இதையும் படிங்க : ரஜினி பிறந்த நாளையொட்டி 73 கிலோவில் உருவாக்கப்பட்ட கேக்… ரசிகர்கள் கொண்டாட்டம்…

அதேபோல் நடிகர் அஜித்தின் 61வது திரைப்படமான துணிவு திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியானபோது தனது உணவகத்தில் குழுக்கள் பரிசு நடத்தி முதல் பரிசாக இருசக்கர வாகனம், பிரிட்ஜ், வாஷிங் மெஷின், சைக்கிள் உள்ளிட்ட 61 மெகா பரிசை வாடிக்கையாளர்களுக்கு வழங்கினார்.

அதாவது வீரம் உணவகத்தில் 61 ரூபாய்க்கு மேல் பொருட்கள் வாங்கும் நபர்களுக்கு குலுக்கல் பரிசு போட்டி நடத்தப்பட்டு ஒரு லட்சம் மதிப்புள்ள இருசக்கர வாகனம், எல்.இ.டி. டிவி, மிதிவண்டி , வாஷிங் மெஷின், வெட் கிரைண்டர், மிக்ஸி, குக்கர், சோபா செட், உள்ளிட்ட 61 பொருட்கள் பரிசு தொகையாக வழங்கப்பட்டது.

அதுமட்டுமல்லாமல் அஜித் நடித்த 61 திரைப்படத்தின் பெயர்களையும் எழுதியும் அவரின் புகைப்படத்தை ஒட்டி ஆல்பம் ஆக தயாரித்து வருபவர்களுக்கு சிக்கன் பிரியாணி 60 ரூபாய்க்கும் வழங்கினார்.

துணிவு திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் காட்சி பழைய பத்து ரூபாய் நோட்டு போன்று இருப்பதால் பழைய பத்து ரூபாய் கொடுத்து சிக்கன் பிரியாணி பெற்று கொள்ளலாம் என்ற ஆஃபரும் இங்கே உள்ளது .

துணிவு திரைப்படம் :

இந்நிலையில், துணிவு திரைப்படத்தின் முதல் பாடலான “சில்லா சில்லா” பாடல் வெளியிடப்பட்டதை தொடர்ந்தும் துணிவு திரைப்படம் மாபெரும் வெற்றி பெற வேண்டும் என்பதற்காக தேனி மாவட்டம் சின்னமனூர் பகுதியில் அமைந்துள்ள வீரம் உணவகத்தில் நடிகர் அஜித்தின் உருவ சிலையை திறந்து உள்ளார்.

அஜித் ரசிகர்கள் அஜித்தை நேரில் சந்தித்து புகைப்படம் எடுக்க முயற்சித்து வரும் நிலையில், அவர்கள் அஜித்திடம் நேரடியாக புகைப்படம் எடுக்கும் ஆசையை நிறைவேற்ற நடிகர் அஜித்தின் உருவ சிலையை வைத்ததாக உணவகத்தின் உரிமையாளரான காளிதாஸ் கூறினார்.

மேலும் நடிகர் அஜித்தின் சரியான உயரத்தில் துணிவு திரைப்படத்தின் தோற்றத்தில் பைபர் மற்றும் மெழுகினால் ஆன ரூ.5 லட்சம் மதிப்புள்ள சிலையை திறந்து உள்ளார். நடிகர் அஜித் தம்ஸ் அப் காட்டுவது போல வடிவமைக்கப்பட்ட சிலை பார்ப்பதற்கு தத்ரூபமாக இருப்பதால் சிலை முன்பு செல்பி எடுப்பதற்காக ரசிகர்கள் கூட்டம் அலைமோதுகிறது.

மேலும் துணிவு படம் வெளியாகும்போது தமிழகத்தின் அனைத்து பகுதிகளிலும் துணிவு திரைப்படத்தின் முதல் காட்சியை காணும் ரசிகர் அந்த டிக்கெட்டை தனது உணவகத்தில் காண்பித்தால் இலவசமாக அன்லிமிடெட் உணவு உண்ணலாம் என்ற ஆஃபரையும் வழங்கியுள்ளார் உணவக உரிமையாளர் காளிதாஸ்.

இதுகுறித்து கடையின் உரிமையாளரான காளிதாஸ் கூறுகையில், "நடிகர் அஜித்தின் மீது கொண்டுள்ள காதல் காரணமாக பரிசு போட்டியை நடத்தி, இரண்டு லட்சம் ரூபாய் மதிப்பிலான பரிசுத்தொகை பொதுமக்களுக்கு வழங்கினேன். தற்போது துணிவு படம் வெளியாகும் நிலையில் துணிவு திரைப்படம் மாபெரும் வெற்றி பெற ஃப்ரீ ப்ரோமோஷன் ஆக நடிகர் அஜித்தின் சிலையை வைத்துள்ளேன். ரசிகர்கள் எளிதாக நடிகர் அஜித்திடம் செல்பி எடுக்கும் வகையில் தத்ரூபமாக நடிகர் அஜித் தம்சப் காட்டுவது போன்ற வடிவமைப்பில் சிலை வைத்துள்ளேன்.

 மேலும் துணிவு படம் வெளியாகும்போது, தமிழகம் முழுவதிலும் இருந்து துணிவு படத்தின் முதல் காட்சியை கண்டு களித்த ரசிகர்கள் அந்த டிக்கெட்டை எனது உணவகத்தில் காண்பித்து அன்லிமிடெட் ஆக உணவு உண்ணலாம் என்ற ஆஃபரையும் அறிவித்துள்ளேன்” என்றார்.

First published:

Tags: Actor Ajith, Local News, Tamil Cinema, Theni