Home /theni /

சில்லென்று கொட்டும் கும்பக்கரை அருவி... தேனியின் முக்கிய ஷூட்டிங் ஸ்பாட்டில் எடுக்கப்பட்ட படங்கள் தெரியுமா?

சில்லென்று கொட்டும் கும்பக்கரை அருவி... தேனியின் முக்கிய ஷூட்டிங் ஸ்பாட்டில் எடுக்கப்பட்ட படங்கள் தெரியுமா?

கும்பகரை அருவி

கும்பகரை அருவி

தேனி மாவட்டம் பெரியகுளத்திற்கு அருவில் உள்ள முக்கிய ஷூட்டிங் ஸ்பாட்டாக இருக்கிறது கும்பக்கரை அருவி. இங்கே ஷூட் செய்யப்பட்ட திரைப்படக் காட்சிகள் பற்றி இங்கே காணாலம்.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Theni, India
    இயற்கை அழகு ததும்ப பாறைகளிடையே பாய்ந்து வரும் நீரின் மோதலும், அதன் சத்தமும் சாரலும், சுவையும் ஐம்புலன்களையும் ஆட்கொள்ளும் வகையில் அமைந்திருக்கிறது கும்பக்கரை அருவி.

    தேனி மாவட்டம் கொடைக்கானல் அடிவாரத்தில் இருக்கிறது இந்த கும்பக்கரை அருவி. பெரியகுளத்திலிருந்து 8 கி.மீ தொலைவில் உள்ள இந்த அருவியின் நீரில் மூலிகைகள் மற்றும் தாதுப்பொருட்களின் நற்குணங்கள் நிரம்பியுள்ளன.

    ஆர்பரிக்கும் கும்பக்கரை அருவி


    இயற்கையையும், அருவியில் குளித்து மகிழ்வதையும் விரும்பும் ஏராளமான சுற்றுலா பயணிகள் இங்கே வந்து செல்கின்றனர். அருவிக்கு காலை 8 மணி முதல் மாலை 4 மணி வரை மட்டுமே அனுமதிக்கப்படுகிறது.

    கும்பக்கரை அருவியில் சுற்றுலாப் பயணிகள்


    கும்பக்கரை அருவிக்கு பக்கத்தில் சாப்பிடுவதற்கு கடைகள் எதுவும் இல்லாததால் இங்கு வரும் சுற்றுலா பயணிகள், வரும் வழியிலேயே சாப்பிட்டு வருவது நல்லது. இந்த அருவியில் ஏராளமான படங்கள் எடுக்கப்பட்டுள்ளன. அவற்றுள் சில உங்கள் பார்வைக்கு.

    வெண்ணிற ஆடை:

    ஜெயலலிதா நடித்த வெண்ணிற ஆடை படத்தில் வரும் ‘அம்மம்மா...’ பாடல் இங்குதான் ஷூட் செய்யப்பட்டது. அருவிக்கு அருவில் உள்ள பகுதியில் அவர் நீந்தும் காட்சிகள் எடுக்கப்பட்டன.

    வெண்ணிற ஆடை படத்தில் ஜெயலலிதா


    கேப்டன் பிரபாகரன் :

    விஜயகாந்த் நடித்த கேப்டன் பிரபாகரன் படத்தின் பெரும்பாலான காட்சிகள் இந்த பகுதியில்தான் படமாக்கப்பட்டன. அதில் ரம்யா கிருஷ்ணன் ஆடும் ‘ஆட்டமா தேரோட்டமா..’ என்ற பாடலின் காட்சிகள் இங்குதான் எடுக்கப்பட்டன.

    கிழக்கு சீமையிலே:

    பாரதிராஜா இயக்கத்தில் வெளிவந்த கிழக்கு சீமையிலே படத்தில், ‘எதுக்கு பொண்டாட்டி என்ன சுத்தி வப்பாட்டி’ என்ற பாடலில், பாண்டியன் நனைந்தபடி பெண்களுடன் ஆடிப்பாடும் அருவி இந்த கும்பக்கரை அருவிதான்.

    கிழக்கு சீமையிலே படக் காட்சி


    என்னுயிர் தோழன்:

    பாரதிராஜாவின் மற்றுமோரு படமான என்னுயிர் தோழன் படத்தில் வரும் ‘ஏ... ராசாத்தி’ பாடலின் சில காட்சிகள் கும்பக்கரை அருவியில்தான் ஷூட் செய்யப்பட்டன.

    புதிய வார்ப்புகள்:

    பாக்கியராஜ் இயக்கி நடத்த புதிய வார்ப்புகள் படத்தில் வரும், ‘வான் மேகங்களே’ பாடலில் ‘பூவிலே மாலை கட்டி சூடுவேன் கண்ணா...’ என்று கெஞ்சிப் பாடும் காட்சிகள் இங்குதான் படமாக்கப்பட்டன.

    கும்பப்பக்கரை தங்கையா:

    பிரபு, நம்பியார் உள்ளிட்டோர் நடித்த கும்பக்கரை தங்கையா படத்தில் ‘துரேகிகளுக்குத்தான் நாம எதிரி, அரசாங்கத்திற்கு இல்லை’ என்று நம்பியார் ஆக்ரோஷமான பேசும் காட்சி இந்த கும்பக்கரை அருவிக்கு அருகில்தான் எடுக்கப்பட்டது.

    அவன்-இவன்:

    பாலா இயக்கத்தில் ஆர்யா, விஷால் உள்ளிட்ட பிரபலங்கள் நடித்த அவன்-இவன் படத்தில், விஷால் பெரிய நடிகன் என, கையில் மதுபாட்டிலுட்ன் ஆர்யா பேசும் காட்சிகளின் பின்புறத்தில் இந்த அருவி ஆர்ப்பரித்து கொட்டுவதைப் பார்க்க முடியும்.

    இந்த குப்பக்கரை அருவியைப் பார்க்கும் பலருக்கும், இத்ந இடத்தை பார்க்கும்போது பல்வேறு திரைப்படங்களின் காட்சிகள் நினைவுக்கு வந்து, அட, ‘இது அதுல்ல’ என்ற நடிகர் வடிவேலுவின் பிரபல வசனத்தை நினைவுபடுத்தும். சுற்றுலா பயணிகள் தவறவிடக்கூடாத முக்கியமான அருவி இந்த கும்பக்கரை அருவி.
    Published by:Karthick S
    First published:

    அடுத்த செய்தி