முகப்பு /தேனி /

மகா சிவராத்திரி சிறப்பு பூஜை.. கூடலூர் ஈஸ்வரன் கோவிலில் குவிந்த பக்தர்கள்.. 

மகா சிவராத்திரி சிறப்பு பூஜை.. கூடலூர் ஈஸ்வரன் கோவிலில் குவிந்த பக்தர்கள்.. 

X
கூடலூர்

கூடலூர் ஈஸ்வரன் கோவிலில் குவிந்த பக்தர்கள்

Theni News : தேனி மாவட்டம் கூடலூரில் பல ஆண்டுகளுக்கு முன் கூடலூரை ஆண்ட குறுநில மன்னனால் கட்டப்பட்ட சிவன் கோயில் பராமரிப்பு உள்ள நிலையில், இக்கோவிலில் சிவராத்திரியை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டது.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Theni, India

தேனி மாவட்டம் கூடலூரில் அரசு விதைப்பண்ணைக்கு செல்லும் வழியில் தாமரைக்குளம் பகுதியில் பல ஆண்டுகள் பழமை வாய்ந்த ஈஸ்வரன் கோவில் பல ஆண்டுகளாக உரிய பராமரிப்பின்றி முழுவதும் சிதைந்த நிலையில் உள்ளது. இக்கோவிலை கூடலூர், கம்பம், பாளையம் மற்றும் கேரள பகுதியை தன் கட்டுப்பாட்டில் வைத்திருந்த பூஞ்சாறு அரசவம்சத்தை சேர்ந்த பூஞ்சாறு தம்பிரான் அரசன் கட்டியதாக கூறப்படுகிறது. இந்த கோவிலில் மன்னர்களின் ஆட்சி இருந்தபோது பூஜைகள் சிறப்பாக நடைபெற்று, மக்களும் சிறப்பாக வழிபட்டு வந்து உள்ளனர். ஆனால் நாள்போக்கில் இந்த கோவில் உரிய பராமரிப்பு இன்றி சிதைந்த நிலையில் உள்ளது.

கோவில் சிதைந்து நிலையில் காணப்படுவதால் தற்போது ஓரிரு பக்தர்கள் மட்டுமே வந்து சென்ற நிலையில், பல ஆண்டுகளுக்கு பின்பு இக்கோவில் மகா சிவராத்திரி சிறப்பு பூஜை பொதுமக்கள் சார்பாக நடத்தப்பட்டது. கோவில் வண்ண விளக்குகளால் அலங்காரம் செய்யப்பட்டும் , ஈஸ்வரனுக்கு சிவராத்திரியை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் இரவு முழுவதும் நடைபெற்றது. இக்கோவிலில் சுமார் 2000க்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டு தேவாரம், திருவாசகம் உள்ளிட்ட பாடல்களை பாடி இறை வழிபாட்டில் ஈடுபட்டனர் . பல ஆண்டுகளுக்கு பின்பு இக்கோயில் ஒரே சமயத்தில் 2000க்கும் மேற்பட்ட பக்தர்கள் தற்போது நடைபெற்ற சிவராத்திரி சிறப்பு பூஜை கலந்துகொண்டனர் . கோவிலுக்கு வந்த பக்தர்களுக்கு சிறப்பு அன்னதானமும் வழங்கப்பட்டது.

First published:

Tags: Local News, Theni