ஹோம் /தேனி /

தேனி வீரபாண்டி அருகே திறக்கப்பட்டுள்ள சுங்கச்சாவடியை அகற்றக்கோரி சிவசேனா கட்சியினர் ஆர்ப்பாட்டம்.. 

தேனி வீரபாண்டி அருகே திறக்கப்பட்டுள்ள சுங்கச்சாவடியை அகற்றக்கோரி சிவசேனா கட்சியினர் ஆர்ப்பாட்டம்.. 

தேனி

தேனி - சிவசேனா கட்சியினர் ஆர்ப்பாட்டம்

Theni Veerapandi Tollgate | தேனி மாவட்டம் உப்பார்பட்டி பகுதியில் உள்ள சுங்கச்சாவடியை அகற்றக்கோரி சிவசேனா கட்சியினர் சுங்கச்சாவடி முன்பு முற்றுகை போராட்டம் மற்றும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Theni Allinagaram, India

தேனி மாவட்டம் உப்பார்பட்டி பகுதியில் உள்ள சுங்கச்சாவடியை அகற்றக்கோரி சிவசேனா கட்சியினர் சுங்கச்சாவடி முன்பு முற்றுகை போராட்டம் மற்றும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

முற்றுகை போராட்டம் :-

தேனி மாவட்டம் வீரபாண்டி அருகே உள்ள உப்பார்பட்டி பகுதியில் கடந்த 1ம் தேதி சுங்கச்சாவடி வசூல் மையம் திறக்கப்பட்டது.

இந்த சுங்கச்சாவடியில் குமுளி முதல் திண்டுக்கல் வழியாக செல்லும் வாகனங்களுக்கு வசூல் செய்யும் மையம் அமைக்கப்பட்டுள்ளது.

தேனி - சிவசேனா கட்சியினர் ஆர்ப்பாட்டம்

இந்த வசூல் மையத்தை முறையாக நான்கு வழிச்சாலைக்கு பயன்படுத்த வேண்டும் என்றும் ஆனால் தற்போது இந்த பகுதியில் இரண்டு வழிச்சாலை மட்டும் தான் உள்ளது இந்த இரண்டு வழிச்சாலையும் முழுமை அடையாத நிலையில் நான்குவழிச் சாலைகளுக்கு சுங்கச்சாவடி வசூல் மையத்தில் வாகனங்களுக்கு வரி வசூலிக்கபட்டு வருவதாக கூறி இந்த சுங்கவரி வசூல் மையத்தை நிறுத்த கோரி இன்று சிவசேனா மாநில செயலாளர் குரு ஐயப்பன் தலைமையில் 20க்கும் மேற்பட்டோர் சுங்கசாவடி அருகே முற்றுகை போராட்டம் மற்றும் கண்டன ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

மேலும் படிக்க:  தேனி மாவட்டத்தை சேர்ந்த பிரபல சினிமா இயக்குனர்கள் யாரெல்லாம் தெரியுமா?

அப்போது வீரபாண்டி காவல்துறையினர் சுங்கச்சாவடி வசூல் மைய பகுதியில் பாதுகாப்பு பணியில் இருந்த காவல்துறையினர் சிவசேனா கட்சியினை தடுத்து நிறுத்தி பேச்சு வார்த்தை நடத்தினர்.

இந்த பேச்சு வார்த்தையில் முறையாக சுங்கச்சாவடி அமைக்கப்பட்டு செயல்பட்டு வருகிறது நீங்கள் சாலை மறியலோ ஆர்ப்பாட்டமோ செய்யக்கூடாது என்று காவல்துறையினர் தடுத்து நிறுத்தினர்

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

ஆர்ப்பாட்டக்காரர்களை காவல்துறையினர் தடுத்து நிறுத்தி கைது செய்து வீரபாண்டி காவலர் சமுதாய கூடத்திற்கு கொண்டு சென்றனர். இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது

Published by:Arun
First published:

Tags: Local News, Theni