ஹோம் /தேனி /

அரசுப்பள்ளிகளில் வசூலித்த விடைத்தாள் கட்டணத்தை திரும்பி வழங்குக.. தேனியில் எஸ்.எஃப்.ஐ மாணவர்கள் ஆர்ப்பாட்டம்

அரசுப்பள்ளிகளில் வசூலித்த விடைத்தாள் கட்டணத்தை திரும்பி வழங்குக.. தேனியில் எஸ்.எஃப்.ஐ மாணவர்கள் ஆர்ப்பாட்டம்

X
போராட்டத்தில்

போராட்டத்தில் மாணவர்கள்

Theni News :தேனி ஆட்சியர் அலுவலகம் முன்பு எஸ்.எஃப்.ஐ மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Theni, India

தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாக இன்று இந்திய மாணவர் சங்கத்தினர் அரசு பள்ளிகளில் விடைத்தாள் கட்டணம் என்ற பெயரில் வசூல் செய்த பணத்தை திருப்பி வழங்க வேண்டும் உள்ளிட்ட 4 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

தேனி ஆட்சியர் அலுவலகம் முன்பாக இன்று இந்திய மாணவர் சங்க தேனி மாவட்ட செயலாளர் வேல் பிரகாஷ் தலைமையில் 4 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்த ஆர்ப்பாட்டத்தில் தேனி அரசு சட்டக் கல்லூரி மாணவர்களுக்கு பேருந்து வசதி வழங்குவது போல கிராமப்புறங்களில் இருந்து அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் பயிலும் மாணவ மாணவிகளுக்கு உரிய பேருந்து வசதி வழங்கிட வேண்டும். ஆண்டிபட்டி, வீரபாண்டி, கோட்டூர், தேக்கம்பட்டி பகுதிகளில் உள்ள கல்லூரிகளுக்கும் உரிய நேரத்தில் பேருந்து வசதியை ஏற்படுத்தி தர வேண்டும்.

அரசு பள்ளிகளில் விடைத்தாள் கட்டணம் என்ற பெயரில் தொடர்ச்சியாக வசூல் செய்வதை தடுக்க வேண்டும் நடவடிக்கை எடுக்க வேண்டும். சில்லமரத்துப்பட்டி, தேவதானப்பட்டி அரசு பள்ளிகளில் வசூல் செய்யப்பட்ட கட்டணத்தை திரும்பி வழங்க வேண்டும் உள்ளிட்ட நான்கு அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்திய மாணவர் சங்கம் தேனி மாவட்ட குழு சார்பாக நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

First published:

Tags: Local News, Protest, School students, Students, Theni