ஹோம் /தேனி /

தேனியில் 70% நன்னீராக்கும் வகையில் கழிவு நீர் சுத்திகரிப்பு நிலையம் திறப்பு

தேனியில் 70% நன்னீராக்கும் வகையில் கழிவு நீர் சுத்திகரிப்பு நிலையம் திறப்பு

தேனி

தேனி கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம்

Theni | தேனி மாவட்டம் கம்பம் நகராட்சியில் கழிவு நீர் சுத்திகரிப்பு மையம் திறந்துவைக்கப்பட்டுள்ளது.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Kambam (Cumbum), India

தேனி மாவட்டம் கம்பம் நகராட்சியில் உள்ள வீடுகளில் இருந்து பெறப்படும் செப்டிக் டேங்க் கழிவுகளை சுத்தப்படுத்தி விவசாயத்திற்கு பயன்படுத்தும் வகையில் உள்ள கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் திறக்கப்பட்டது

கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம்

தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னையிலிருந்து காணொலி காட்சி (Offline) வாயிலாக இன்று நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையின் சார்பில், தேனி மாவட்டம், போடிநாயக்கனூர் நகராட்சிக்குட்பட்ட சுப்புராஜ் நகரில் புதிதாக கட்டப்பட்டுள்ள பயணியர் தங்கும் விடுதி, புதுத்தெருவில் புதிதாக கட்டப்பட்டுள்ள தினசரி மார்க்கெட், மயானத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள தியான மண்டபம், மேலச்சொக்கநாதபுரம் பேரூராட்சியில் கழிவுநீர் உந்து நிலையம் மற்றும் கம்பம் நகராட்சியில் கசடு கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் ஆகியவற்றை திறந்து வைத்தார்.

கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் திறப்பு

இந்த நிலையில் தேனி மாவட்டம் கம்பம் நகராட்சியில் 4 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள கசடு கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்தை தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொளி காட்சி வாயிலாக திறந்து வைத்ததையடுத்து, கம்பம் சட்டமன்ற தொகுதி உறுப்பினர் ராமகிருஷ்ணன் மற்றும் கம்பம் நகர மன்ற தலைவர் வனிதா நெப்போலியன் ஆகியோர் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்தை குத்துவிளக்கு ஏற்றி துவங்கி வைத்தனர்.

கம்பம் நகரில் 70,000 மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். 19,000 மேற்பட்ட வீடுகள் கம்பம் பகுதியில் உள்ளன. 19,000-க்கும் மேற்பட்ட வீடுகளில் இருக்கும் செப்டிக் டேங்க் கழிவுகளை கம்பம் நகராட்சியில் அமைக்கப்பட்டுள்ள கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்துக்கு கொண்டு வந்து சுத்திகரிப்பு செய்யப்படவுள்ளது. இதில் 70% தண்ணீர் நனீராக மாற்றப்பட்டு அது விவசாயத்திற்கு பயன்படுகிறது. மீதமுள்ள 30 சதவீதம் தண்ணீர் உரமாக்கப்பட்டு அதுவும் விவசாயத்திற்கு இலவசமாக வழங்கப்பட உள்ளது.

நாளொன்றுக்கு 40 கிலோ லிட்டர் கழிவுநீரை சுத்திகரிப்பு செய்யும் வசதி கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்தில் உள்ளது.

திடக்கழிவு மேலாண்மையில் கம்பம் நகராட்சி சிறந்து விளங்கும் நிலையில் தற்போது செப்டிக் டேங்க் கழிவுகளை சுத்தப்படுத்தி அதனை நன்னீராக மாற்றி விவசாயத்திற்கு பயன்படுத்தும் இத்திட்டத்தின் மூலம் கம்பம் நகர பொதுமக்கள் மிகுந்த பயனடைவர் என கம்பம் சட்டமன்ற தொகுதி உறுப்பினர் ராமகிருஷ்ணன் தெரிவித்தார்.

இந்த நிகழ்ச்சியில், கம்பம் நகர நகராட்சி ஆணையாளர் பாலமுருகன், பொறியாளர் பன்னீர், உதவி பொறியாளர் சந்தோஷ், சுகாதார அலுவலர் அரசகுமார் மற்றும் நகர மன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

Published by:Karthick S
First published:

Tags: Local News, Theni