50 வயதுக்கு மேற்பட்ட முதியவர்கள் இலவசமாக ஆட்டோ பயணம் மேற்கொள்ளும் இந்த திட்டம் தமிழகத்திலே முதல்முறையாக பேரூராட்சி மற்றும் ஆட்டோ ஓட்டுனர் சங்கங்கள் ஏற்பாட்டில் துவங்கப்பட்டுள்ளது.
தேனி மாவட்டம் பழனிசெட்டிபட்டி பகுதியில் உள்ள காமாட்சியம்மன் கோவில் அருகே உள்ள மைதானத்தில், தேனி மாவட்டத்தில் உள்ள மூத்த குடிமக்கள் ஆட்டோவில் கட்டணம் இல்லாமல் பயணிக்கும் 'கட்டணமில்லா ஆட்டோ பயணம்' திட்டத்தை பழனிசெட்டிபட்டி பேரூராட்சி தலைவர் மிதுன் சக்கரவர்த்தி மற்றும் உசிலம்பட்டி ஊராட்சி ஒன்றிய கவுன்சிலர் அம்மாவாசை குத்து விளக்கு ஏத்தி துவக்கி வைத்தனர்.
பழனிசெட்டிபட்டி பகுதியில் உள்ள நேதாஜி ஆட்டோ ஓட்டுனர் சங்கம் மற்றும் கெளமாரி ஆட்டோ சங்கம், பழனிசெட்டிபட்டி பேரூராட்சி இணைந்து பழனிசெட்டிபட்டியில் உள்ள மூத்த குடிமக்களுக்கு 8248304343, 9600879141 என்ற கைபேசி எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த கைபேசி எண்ணில் தொடர்பு கொண்டு மருத்துவமனை, ரேஷன் கடை, மெடிக்கல், பேருந்து நிலையம் உள்ளிட்ட இடங்களுக்கு இலவசமாக பயணம் மேற்கொள்ளலாம் .
பழனி செட்டியப்பட்டியில் உள்ள நேதாஜி ஆட்டோ ஓட்டுநர் சங்கத்தில் 30 ஆட்டக்களும் கௌமாரியம்மன் ஆட்டோ சங்கத்தில் 15 ஆட்டோக்களும் மொத்தம் 45 ஆட்டோக்கள் இந்த சேவையில் ஈடுபடுத்தப்பட உள்ளது.
உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க
தமிழகத்தில் முதல் முறையாக இந்த மூத்த குடிமக்களுக்கு கட்டணமில்லா ஆட்டம் சேவை துவங்கப்பட்டுள்ளது ஏற்கனவே பல்வேறு பகுதிகளில் பிரசவத்திற்கும் இலவசம் என ஆட்டோவில் பதிவு செய்து நடைமுறையில் உள்ள நிலையில், முதியோர்களுக்கு இந்தத் திட்டம் முதல் முறையாக பழனிசெட்டிபட்டியில் துவக்கப்பட்டுள்ளது.
இந்த சேவையானது தேனி பகுதி மக்களிடையே மிகுந்த வரவேற்பையும் பாராட்டு பெற்றுள்ளது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Auto, Local News, Theni