பூமாலை வணிக வளாகங்கள் பொன்விழா கிராம சுய வேலைவாய்ப்பு(SGSY) திட்டத்தின் கீழ் முக்கிய இடங்களில் அமைக்கப்பட்டுள்ளது. மேலும், மாவட்ட தலைமையகத்தில் உள்கட்டமைப்பு மற்றும் சந்தைப்படுத்துதல் ஆதரவை வழங்குவதோடு மகளிர் சுய உதவிக்குழுவின் தயாரிப்புகளை காட்சிப்படுத்துவதற்கும் விற்பனை செய்வதற்கும் எளிதான அணுகலை வழங்குகிறது. தேனி மாவட்டத்தில் தேனி உழவர் சந்தைக்கு எதிர்புறம் மாவட்ட பூமாலை வணிக வளாகம் அமைந்துள்ளது.
பூமாலை வணிக வளாகம் :-
தமிழ்நாடு மகளிர் நல மேம்பாட்டு நிறுவனமானது தமிழ்நாட்டில் உள்ள மகளிர் சுய உதவிக்குழு இயக்கத்தை முன்னின்று நடத்தும் முன்னோடி நிறுவனமாக செயல்பட்டு வருகிறது. இதில், சமூக அணிதிரட்டல், திறன் மேம்பாடு மற்றும் வாழ்வாதார நடவடிக்கைகள் மூலம் பெண்களின் சமூக பொருளாதார மேம்பாட்டிற்காகவும் செயல்பட்டு வருகிறது.
வாழ்வாதார நடவடிக்கைகள் மூலம் சுய உதவிக்குழுக்களை ஆதரிப்பதற்கும், மேம்படுத்துவதற்கும் அனைத்துக் கொள்கை உருவாக்கத்திலும் சந்தைபடுத்துதல் இன்றியமையாத அங்கமாக உருவெடுத்துள்ளது. மேலும், பல ஆண்டுகளாக தமிழ்நாடு மகளிர் நல மேம்பாட்டு நிறுவனம் பல்வேறு திட்டங்களை செயல்படுத்துவதன் மூலம் சுய உதவிக்குழுக்களின் தயாரிப்புகளை சந்தைப்படுத்துவதற்கான, ஆதரவளிப்பதற்கான பல முயற்சிகளை எடுத்துள்ளது.
மாநிலம் முழுவதும் உள்ள சுய உதவிக்குழுக்களால் பலதரப்பட்ட தயாரிப்புகள் தயாரிக்கப்படுகின்றன. ஆனால், தெரிவுநிலையை உருவாக்குதல், சந்தைப்படுத்துவதற்கான இடம், பொருட்களின் சேமிப்பு, கண்காட்சி போன்ற பல்வேறு சந்தைபடுத்தல் தொடர்ச்சியாக வழங்கி வருகிறது.
பூமாலை வணிக வளாகங்கள் பொன்விழா கிராம சுய வேலைவாய்ப்புத் திட்டம் (SGSY) திட்டத்தின் கீழ் முக்கிய இடங்களில் அமைக்கப்பட்டுள்ளது. மேலும், மாவட்ட தலைமையகத்தில் உள்கட்டமைப்பு மற்றும் சந்தைப்படுத்துதல் ஆதரவை வழங்குவதோடு மகளிர் சுய உதவிக்குழுவின் தயாரிப்புகளை காட்சிப்படுத்துவதற்கும் விற்பனை செய்வதற்கும் எளிதான அணுகலை வழங்குகிறது. தேனி மாவட்டத்தில் தேனி உழவர் சந்தைக்கு எதிர்புறம் மாவட்ட பூமாலை வணிக வளாகம் அமைந்துள்ளது.
இக்கட்டிடம் 2022-23 ம் நிதியாண்டில் 10.76 லட்சத்தில் பழுதுநீக்கல் மற்றும் பராமரிப்பு வேலைகள் முடிக்கப்பட்டுள்ளது. இக்கட்டிடத்தில் 16 கடைகள் மற்றும் 4 பயிற்சி கூடங்கள் உள்ளது. தற்போது 9 கடைகளுக்கு மகளிர் சுய உதவிக்குழுக்கள் அல்லது மகளிர் சுய உதவிக்குழு உறுப்பினர்களை தாங்கள் உற்பத்தி செய்யும் பொருட்களை விற்பனை செய்திட ஏதுவாக கடைகள் வாடகைக்கு வழங்கப்பட உள்ளது.
மகளிர் சுய உதவிக்குழுவைச் சார்ந்த உறுப்பினர்கள் அல்லது குழுக்கள் வருகின்ற 30.05.2023-ம் தேதிக்குள் விண்ணப்பத்தினை தாங்கள் சார்ந்த சுய உதவிக்குழு மற்றும் ஊராட்சி அளவிலான கூட்டமைப்பின் பரிந்துரையுடன் திட்ட இயக்குநர், மகளிர் திட்டம் பெருந்திட்ட வளாகம் தேனி என்ற முகவரியில் விண்ணப்பங்களை நேரில் சமர்ப்பித்து பயனடையலாம் என தேனி மாவட்ட ஆட்சித்தலைலர் ஷஜீவனா தெரிவித்துள்ளார்.
உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Local News, Theni