முகப்பு /தேனி /

“இல்லத்தரசிகளும் தொழில் முனைவோர் ஆகலாம்..” கம்பத்தில் பெண்களுக்கு இலவச தொழில் பயிற்சி..!

“இல்லத்தரசிகளும் தொழில் முனைவோர் ஆகலாம்..” கம்பத்தில் பெண்களுக்கு இலவச தொழில் பயிற்சி..!

X
தொழில்

தொழில் முனைவோர் பயிற்சி  

Theni News | தேனி மாவட்டம் கம்பம் பகுதியில் உள்ள இலாஹி ஓரியண்டல் பள்ளியில் கம்பம் கல்விச் சங்கம் சார்பில் பெண்களுக்கான வேலைவாய்ப்பு பயிற்சி கருத்தரங்கம் நடைபெற்றது.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Theni, India

தேனி மாவட்டம் கம்பம் பகுதியில் உள்ள பெண்களுக்கு வேலை வாய்ப்பை அதிகரிக்க வேண்டும் என்ற நோக்கத்தோடு அனைவரும் சுய தொழிலை கற்றுக் கொள்ள வேண்டும் என்பதற்காக கம்பம் தாத்தப்பன் குளம் பகுதியில் அமைந்துள்ள இலாஹி ஓரியண்டல் அரபிக் உயர்நிலைப் பள்ளியில் பெண்கள் வீட்டிலேயே பினாயில் மற்றும் ஊதுபத்தி தயாரிக்கும் தொழில் பயிற்சியும், தயாரிக்கப்பட்ட பொருட்களை சந்தைப்படுத்துவதற்கான தொழில் நுட்பமும் உரிய தொழில் வல்லுனர்கள் தலைமையில் நடத்தப்பட்டது.

இந்த நிகழ்ச்சியில் கம்பம் நகர மன்ற தலைவர் வனிதா நெப்போலியன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு, இன்றைய சூழலில் பெண்கள் சுயதொழிலில் ஈடுபட்டு வருமானத்தை இரட்டிப்பு ஆக்கும் முயற்சியில் இறங்க வேண்டும் என சிறப்புரை ஆற்றினார்.

இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பெண்களுக்கு பெண் தொழில் முனைவோர் ஆன சின்னமனூர் பகுதியை சேர்ந்த காஞ்சனா என்ற பெண்மணி வீட்டில் இருந்தபடியே பினாயில் சோப் ஆயில் தயாரிப்பது குறித்து தெளிவாக எடுத்துரைத்தார்.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

கம்பம் கல்விச் சங்கம் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிகழ்ச்சியில் ஏராளமான பெண்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டு பயன்பெற்றனர்.

நிகழ்ச்சியில் நகர் மன்ற உறுப்பினர்கள் M.பார்த்திபன் , S.சாகிதா பானு , E. அமுதா எபினேசர், பேராசிரியர் M.பாத்திமா பர்வீன், பேச்சாளர் திருமதி T.சாந்தி , திருமதி A.காஞ்சனா , கம்பம் கல்வி சங்க நிர்வாகிகள் P.M.காதர் முஹைதீன், K.அம்ஜத் அலி , A.முஹம்மது ஜியாவுதீன், B. முஹம்மது ஜியாவுல் ஹக் ஆகியோர் விழாவில் கலந்து கொண்டனர்.

First published:

Tags: Local News, Theni, Women Empower