முகப்பு /தேனி /

பள்ளி நேரங்களில் தேனி நகர் பகுதிக்குள் சரக்கு வாகனங்களை அனுமதிக்க தடை விதிக்க கோரிக்கை..

பள்ளி நேரங்களில் தேனி நகர் பகுதிக்குள் சரக்கு வாகனங்களை அனுமதிக்க தடை விதிக்க கோரிக்கை..

X
மாவட்ட

மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்த இந்து எழுச்சி முன்னணி நிர்வாகிகள்  

Theni News | தேனி நகர் பகுதி எப்போதும் வாகன போக்குவரத்து மிகுந்த பகுதியாக உள்ளதால் பள்ளி மாணவ மாணவிகள் சாலையை கடப்பதில் பெரும் சிக்கலை சந்தித்து வரும் சூழலில், சரக்கு வாகனங்களால் மேலும் போக்குவரத்து ஏற்படுகிறது.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Theni, India

பள்ளி மாணவர்கள் பள்ளி செல்லும் வேளையில் சரக்கு வாகனங்களை தேனி நகர்ப்பகுதிக்குள் அனுமதி தடை விதிக்ககோரி இந்து எழுச்சி முன்னணி நகரச் செயலாளர் முத்துராஜ் தலைமையில் இந்து எழுச்சி முன்னணி நிர்வாகிகள் தேனி மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்துள்ளனர்.

மாவட்ட ஆட்சியரிடம் மனு :-

தேனி நகர் பகுதி எப்போதும் வாகன போக்குவரத்து மிகுந்த பகுதியாக உள்ளதால் பள்ளி மாணவ மாணவிகள் சாலையை கடப்பதில் பெரும் சிக்கலை சந்தித்து வரும் சூழலில், சரக்கு வாகனங்களால் மேலும் போக்குவரத்து ஏற்படுவதாக இந்து முன்னணி நிர்வாகிகள் குற்றம் சாட்டுகின்றனர். பள்ளி மாணவ மாணவிகளின் நலன் கருதி பள்ளி நேரங்களில் சரக்கு வாகனங்களை நகர் பகுதிக்குள் அனுமதிக்க கூடாது என்ற மனு அளிக்கப்பட்டதாக இந்து எழுச்சி முன்னணி நிர்வாகிகள் தெரிவித்தனர்.

மேலும் தேனி கிழக்குச் சந்தையின் வழியாக தினமும் தனியார் மற்றும் அரசு பள்ளிக்கு சுமார் 7ஆயிரம் மாணவ மாணவிகள் பள்ளிக்குச் சென்று வருவதாகவும், ஆட்டோ டூவீலர்களிலும் ஏராளமான பள்ளி மாணவர்களை அழைத்து வந்து இறக்கிவிட்டு செல்கின்றனர் எனவும் கூறினர்.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

ஆகையால் காலை 8 .30 மணி முதல் 9.15 மணி வரையும் மாலையில்

3. 00மணி முதல் 4.30 மணி நேரங்களில்

அப்பகுதியில் பள்ளி மாணவர்கள் கூட்டம் அதிகமாக காணப்படுவதால், அந்த நேரத்தில் சரக்கு லாரிகள், வேன்களை அதிகளவில் நிறுத்தி கொள்வதால் போக்குவரத்து நெரிசல் அதிகமாவது மட்டுமன்றி பள்ளிக்கு வரும் மாணவர்கள் அவ்வப்போது விபத்தில் சிக்கும் சூழலும் உள்ளதாக கூறினர்.

ஆகையால் காவல்துறையினர் கவனம் செலுத்தி தேனி நகர் பகுதியில் பள்ளி மாணவர்கள் சென்று வரும் நேரத்தில் சரக்கு வாகனங்களை நகர் பகுதியில் அனுமதிப்பதை தவிர்க்க வேண்டும் எனவும், பங்களா மேடு பாரஸ்ட் ரோடு பிரிவில் விபத்து அதிகமாக நடைபெறுவதால் அந்த இடத்தில் வேகத்தடை அமைத்து தர வேண்டும் என்ற கோரிக்கைகள் அடங்கிய மனுவை தேனி மாவட்ட ஆட்சியிடம் வழங்கியதாக கூறினர்

First published:

Tags: Local News, Theni, Traffic