முகப்பு /தேனி /

பெரியகுளம் நதீஸ்வரர் திருக்கோயிலின் இரண்டாம் ஆண்டு வருஷாபிஷேக பூர்த்தி விழா! 

பெரியகுளம் நதீஸ்வரர் திருக்கோயிலின் இரண்டாம் ஆண்டு வருஷாபிஷேக பூர்த்தி விழா! 

X
வருஷாபிஷேக

வருஷாபிஷேக பூர்த்தி விழா 

Theni District | தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே உள்ள தென்கரையில் உள்ள அருள்மிகு ஸ்ரீ ஆதிவராகநதி கணபதி ஸ்ரீ ஆதிவராக நதீஸ்வரர் கோயிலின் இரண்டாம் ஆண்டு வருஷாபிஷேக பூர்த்தி விழா நடைபெற்றது.

  • Last Updated :
  • Theni, India

தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே உள்ள தென்கரைப் பகுதியில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ ஆதிவராகநதி கணபதி ஸ்ரீ ஆதிவராக நதீஸ்வரர் திருக்கோயிலின் இரண்டாம் ஆண்டு வருஷாபிஷேக பூர்த்தி விழா நடைபெற்றது.

தென்கரைப் பகுதியில் அமைந்துள்ள புகழ்பெற்ற இக்கோயிலில் காலை ஒன்பது மணி முதல் விக்னேஸ்வர பூஜை புண்யாக வாசனம் , ஸ்ரீ மஹா கணபதி ஹோமம் ஸ்ரீ ருத்ர சஹஸ்ர நாமம் , பூர்ணாகுதி பூஜைகள் நடைபெற்ற பின் கணபதி ஸ்ரீ ஆதிவராக நதீஸ்வரருக்கு தீபாராதனை காட்டும் நிகழ்ச்சி நடைபெற்றது.

<strong>உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற <a href="https://www.youtube.com/channel/UCgSkbmwaB-iVtyW3f0nL3Cg?sub_confirmation=1">கிளிக் </a>செய்க</strong>

அதனைத் தொடர்ந்து ஸ்ரீ சிவசஹஸ்ரநாமம், திரவியாகுதி , மூலவர் அபிஷேகம் போன்ற பூஜைகள் செய்யப்பட்டது . சிறப்பு அபிஷேகம் அலங்காரம் செய்யப்பட்ட பின் தீபாரதனை காட்டும் நிகழ்ச்சி நடைபெற்றது.

இரண்டாம் ஆண்டு வருஷா அபிஷேகம் பூர்த்தி விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

First published:

Tags: Local News, Theni