காசநோயை ஒழிக்க வேண்டிய அவசியம் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக கூடலூர் என்.எஸ்.கே.பி பொன்னையா கவுண்டர் மேல்நிலைப் பள்ளியைச் சேர்ந்த மாணவர்கள், முதுநிலை சிகிச்சை மேற்பார்வையாளர் மற்றும் சுகாதார மேற்பார்வையாளருடன் இணைந்து பொதுமக்களுக்கு பேரணி மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
விழிப்புணர்வு பேரணி
தேனி மாவட்டம் கூடலூர் பகுதியிலுள்ள என் எஸ் கே பி பொன்னையா கவுண்டர் அரசு உதவி பெறும் மேல்நிலைப் பள்ளியில் பயிலும் மாணவர்களுக்கு காசநோய் ஒழிப்பு மற்றும் தமிழகத்தில் காச நோயை ஒழிக்க வேண்டிய அவசியம் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. பின்னர், மாணவர்கள் பங்கேற்ற விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.
சுகாதாரத்துறை சார்பில் தமிழக முழுவதும் காசநோய் ஒழிப்பு குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. தற்போது தேனி மாவட்டத்தில் மாவட்ட காசநோய் மையம் மற்றும் கூடலூர் ஆரம்ப சுகாதார நிலையம் சார்பில் கூடலூர் பகுதியில் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.
தேனி மாவட்டத்திலுள்ள அனைத்து வட்டாரங்களில் விழிப்புணர்வு நிகழ்ச்சிகளும் பேரணிகளும் நடைபெற்று வரும் நிலையில் முதல் கட்டமாக கம்பம் வட்டாரத்தில் கூடலூர் பகுதியில் இந்த விழிப்புணர்வு பேரணி நடை பெற்றது.
கூடலூர் பகுதியில் அமைந்துள்ள என்.எஸ்.கே.பி பொன்னையா கவுண்டர் மேல்நிலைப் பள்ளியில் பயிலும் மாணவ, மாணவிகளுக்கு முதுநிலை சிகிச்சை மேற்பார்வையாளர் கௌதம் மற்றும் சுகாதார பார்வையாளர் விமலா தலைமையில் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்பட்டது. பின்னர், ஆசிரியர்கள் தலைமையில் என்.எஸ்.கே.பி பள்ளியிலிருந்து கூடலூர் பேருந்து நிலையம் வரை விழிப்புணர்வு ஊர்வலம் நடைபெற்றது.
காசநோயை ஒழிக்க வேண்டிய அவசியம் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டி இந்த ஊர்வலம் நடைபெற்றதாக அலுவலர்கள் தெரிவித்தனர். இந்த ஊர்வலத்தில் பள்ளியில் பயிலும் 200-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.
80 லட்சம் கொடுத்தால் 1 கோடி கிடைக்கும் - ஹவாலா பணம் மாற்றுவதாக மோசடி செய்த கும்பல் கைது
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Local News, Theni