ஹோம் /தேனி /

“தீபாவளியன்று பட்டாசுகளால் விபத்துக்குள்ளாவது அதிகம் பள்ளி மாணவர்கள் தான்" - மாவட்ட தீயணைப்பு அலுவலர்

“தீபாவளியன்று பட்டாசுகளால் விபத்துக்குள்ளாவது அதிகம் பள்ளி மாணவர்கள் தான்" - மாவட்ட தீயணைப்பு அலுவலர்

தீயணைப்பு துறை விழிப்புணர்வு

தீயணைப்பு துறை விழிப்புணர்வு

Fire And Safety | பள்ளி மாணவ, மாணவிகளுக்கு தீபாவளி பண்டிகையை பாதுகாப்பாக கொண்டாடுவது குறித்தும், தீ விபத்து ஏற்பட்டால் தீயணைப்புத் துறையினர் எவ்வாறு விரைந்து வந்து தீயை அணைக்கின்றனர் என்பது தொடர்பான விளக்கப் பயிற்சியும் செய்து காட்டப்பட்டது.

மேலும் படிக்கவும் ...
  • News18 Tamil
  • 3 minute read
  • Last Updated :
  • Theni, India

தேனி மாவட்டத்தில் தீபாவளியன்று பாதுகாப்பான முறையில் பட்டாசு வெடிப்பது தொடர்பாக பல இடங்களில் தீயணைப்புத்துறையினர் விழிப்புணர்வை ஏற்படுத்தி வரும் நிலையில் கம்பம் நகரில் உள்ள தனியார் பள்ளியில் தீயணைப்பு மற்றும் மீட்பு குழுவினர், பேரிடர் மீட்பு துறையினர் சார்பில் தீ விபத்து குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.

தேனி மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் தீயணைப்பு துறையினர் தீபாவளி பண்டிகையை பாதுகாப்பாக கொண்டாட வலியுறுத்தியும், தீ விபத்துகளில் இருந்து தற்காத்து கொள்வதற்கான வழி முறைகளையும் எடுத்து கூறும் விதமாக விழிப்புணர்வு நிகழ்ச்சியை நடத்தி வருகின்றனர்.

அந்த வகையில், தேனி மாவட்டம் கம்பம் நகரில் உள்ள தனியார் பள்ளியில் பண்டிகை நாட்களில் ஏற்படும் தீ விபத்துக்களில் இருந்து தங்களை எவ்வாறு தற்காத்து கொள்வது குறித்து தீயணைப்பு மற்றும் பேரிடர் மீட்பு குழுவினர் சார்பில் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

இதையும் படிங்க : போதை பொருள் பயன்பாட்டிற்கு எதிராக Anti Drug Club தொடங்கிய தேனி காவல்துறை..

தேனி மாவட்ட தீயணைப்பு அலுவலர் கல்யாண்குமார் தலைமையில் கம்பம் தீயணைப்பு நிலைய அலுவலர் ராஜலட்சுமி தலைமையில் மீட்பு குழுவினர் தீ விபத்து குறித்தும், பாதுகாப்பான முறையில் பட்டாசுகள் வெடிப்பது குறித்தும் விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில், கம்பம் நகரில் உள்ள தனியார் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு எவ்வாறு பாதுகாப்பான முறையில் பட்டாசு வெடிப்பது தொடர்பாக பட்டாசுகளை வெடித்து காட்டினர்.

மேலும் பள்ளியில் உள்ள பள்ளி மாணவ, மாணவிகளுக்கு தீபாவளி பண்டிகையை பாதுகாப்பாக கொண்டாடுவது குறித்தும், தீ விபத்து ஏற்பட்டால் தீயணைப்புத் துறையினர் எவ்வாறு விரைந்து வந்து தீயை அணைக்கின்றனர் என்பது தொடர்பான விளக்கப் பயிற்சியும் செய்து காட்டப்பட்டது.

தீபாவளி பண்டிகையின்போது பட்டாசு வெடிக்கையில், கண்டிப்பாக அருகில் தண்ணீர் வாலி வைத்துக் கொள்ள வேண்டும் எனவும், பண்டிகை காலங்களில் சமையலறைகளில் எண்ணெய் பாத்திரங்களில் தீப்பற்றும்போது தண்ணீர் ஊற்றி அணைக்க கூடாது என்றும், அருகிலுள்ள ஈரச் சாக்கை தீ பரவும் இடத்தில் போர்த்த வேண்டும் என பல்வேறு அறிவுரைகளை மாணவர்களுக்கு தீயணைப்பு நிலைய அலுவலர் எடுத்துரைத்தார்.

இதையும் படிங்க :  தேனி மாவட்டத்தில் உள்ள அணைகளுக்கு நீர்வரத்து அதிகரிப்பு - அணைகளில் நீர் இருப்பு நிலவரம் இது தான்..

அதனைத் தொடர்ந்து வடகிழக்கு பருவ மலையை எதிர்கொள்ளும் விதமாக தீயணைப்பு துறை எவ்வாறு தயாராக உள்ளன எவ்வாறு மீட்டுப் பணிகளை மேற்கொள்வதற்கு ஆயத்தம் ஆவர், மலைக்கலங்களில் பள்ளி மாணவ மாணவிகள் மேற்கொள்ள வேண்டியது மேற்கொள்ளக்கூடாது உள்ளிட்ட அனைத்து அறிவுரைகளையும் வழங்கினார் .

வடகிழக்கு பருவமழை :

அதனை தொடர்ந்து தற்போது வடகிழக்கு பெருமழை தொடங்கியுள்ளதால் ஆறு மற்றும் நீர்நிலைகளில் நீர்வரத்து அதிகமாக காணப்படுவதாகவும் , பள்ளி மாணவ மாணவிகள் விழிப்புணர்வின்றி அபாயத்தை உணராமல் நீர் நிலைகளில் குளிக்க சென்று வெள்ளத்தில் சிக்கிக் கொள்ளாமல் இருப்பதற்கான அறிவுரைகளும் வழங்கப்பட்டது. எதிர்பாராத விபத்தில் சிக்கிய நபரை எவ்வாறு மீட்பது , வெள்ளத்தில் ஒரு நபர் அடித்து செல்லப்பட்டால் அவரை எவ்வாறு மீட்பது அவர் எவ்வாறு தன்னை தற்காத்துக் கொள்வது உள்ளிட்ட பல்வேறு வகையான செயல்முறை விளக்கங்கள் அளிக்கப்பட்டன .

இந்த நிகழ்ச்சி குறித்து தேனி மாவட்ட தீயணைப்பு அலுவலர் கல்யாண்குமார் கூறுகையில் , “தீபாவளியன்று பள்ளி மாணவ, மாணவிகள் பாதுகாப்பான முறையில் பட்டாசுகள் வெடிக்க வேண்டும் என்பதற்காகவே இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்பட்டது. அரசு மருத்துவமனைகளில் தீபாவளி, தீபாவளிக்கு முந்தைய நாள் மற்றும் அதற்கு மறுநாள் விபத்துகளில் சிக்கி சிகிச்சை பெறுபவர்கள் பெரும்பாலும் பட்டாசால் ஏற்படும் விபத்துகளால் சிகிச்சை பெறுகின்றனர் என்று புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. அதிலும் குறிப்பாக பள்ளி மாணவ மாணவிகள் தான் அதிகமாக விபத்துக்குள்ளாகின்றனர் .

அதேபோல் பருவ மழைக்காலங்களில் ஆற்றுப்பகுதிகளில் நீர் அதிகமாக ஓடும் பொழுது வெள்ளத்தில் சிக்கிக் கொண்டதாக தீயணைப்பு நிலையத்திற்கு புகார் வரும்போது நாங்கள் அந்த புகாரின் அடிப்படையில் மீட்டுப் பணிக்காக ஆற்றுப் பகுதிக்கு சென்று பார்க்கும் போது அங்கு வெள்ளத்தில் சிக்கிக் கொண்டிருப்பது பள்ளி மாணவர்கள் தான். எனவே பள்ளி மாணவ மாணவிகளுக்கு போதிய விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்பதற்காக இந்த விழிப்புணர் நிகழ்ச்சி நடத்தப்பட்டது” என்றார்.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

மேலும் தீயணைக்கும் உபகரணங்களை எவ்வாறு பயன்படுத்துவது என்பது குறித்தும் பள்ளி மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு விளக்கமாக எடுத்துரைக்கப்பட்டது. இதில், பள்ளி ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் என 500க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

Published by:Karthi K
First published:

Tags: Deepavali, Fire crackers, Local News, Theni