தேனி மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து, குறைந்தபட்சம் ஐந்தாண்டுகளுக்கும் மேலாக வேலை இல்லாமல் காத்திருப்போருக்கு தமிழக அரசால் உதவித் தொகை வழங்கப்படுகிறது. இத்திட்டத்தில் விண்ணப்பிப்பதற்கான அறிவிப்பை தேனி மாவட்ட நிர்வாகம் வெளியிட்டுள்ளது.
வேலைவாய்ப்பற்றோர் உதவித்தொகை :-
தேனி மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து, 30.06.2022 அன்றைய தேதிப்படி குறைந்தபட்சம் ஐந்தாண்டுகளுக்கும் மேலாக வேலை இல்லாமல் காத்திருப்போருக்கு தமிழக அரசால் உதவித் தொகை வழங்கப்படுகிறது.
தற்போது இத்திட்டத்தின்படி காலாண்டு ஒன்றுக்கு எஸ்.எஸ்.எல்.சி. தோல்வி கல்வித் தகுதியை பதிவு செய்தவர்களுக்கு 600 ரூபாயும், எஸ்.எஸ்.எல்.சி தேர்ச்சி பதிவு செய்தவர்களுக்கு 900 ரூபாயும்,
மேல்நிலை வகுப்பு தேர்ச்சி பதிவு செய்தவர்களுக்கு 1,200 ரூபாயும், பட்டம் மற்றும் முதுகலைப் பட்டம் படித்து பதிவு செய்தவர்களுக்கு 1,800 ரூபாயும், மூன்று வருடங்களுக்கு தமிழக அரசால் வழங்கப்படுகிறது.
மாற்றுத்திறனாளி மனுதாரர் எனில் வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் பதிவு செய்து, குறைந்தபட்சம் ஒரு வருடம் நிறைவு செய்திருத்திலே போதுமானது.
மாற்றுத்திறனாளி மனுதாரர்களின் எஸ்.எஸ்.எல்.சி தேர்ச்சி மற்றும் அதற்கு கீழான தகுதி வரை பதிவு செய்தவர்களுக்கு காலாண்டு ஒன்றுக்கு 1,800 ரூபாயும், மேல்நிலைக் கல்வித் தகுதியை பதிவு செய்தவர்களுக்கு 2,250 ரூபாயும், பட்டதாரிகள் எனில் 3,000 ரூபாயும், பத்து வருடங்களுக்கு தமிழக அரசால் வழங்கப்படுகிறது.
உதவித் தொகை பெற வேண்டிய தகுதிகள்
இத்திட்டத்தின் கீழ் உதவித்தொகை பெற கீழ்காணும் தகுதிகளை பதிவுதாரர்கள் பெற்றிருக்க வேண்டும்.
1. 30.06.2022ம் தேதி அன்று நிலவரப்படி ஆதிதிராவிடர் பழங்குடியினர் 45 வயதிற்கு மிகாமலும், ஏனையோரைப் பொறுத்த மட்டில் 40 வயதிற்கு மிகாமலும் இருத்தல் வேண்டும்.
2. மனுதாரர்களின் குடும்ப ஆண்டு வருமானம் ரூ.72,000/-க்கு மிகாமல் இருத்தல் வேண்டும். மாற்றுத்திறனாளி மனுதாரர் எனில் குடும்ப ஆண்டு வருமானத்திற்கு உச்ச வரம்பு கிடையாது.
3. பொறியியல், மருத்துவம், விவசாயம், கால்நடை மருத்துவம், சட்டம் போன்ற தொழிற்கல்வி பட்டதாரிகள் இந்த உதவித் தொகை பெற தகுதியில்லாதவர்கள்.
இந்த உதவித்தொகை பெறுவதற்கு தேனி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி மையத்தில் பதிவு செய்துள்ள பதிவுதாரர்கள்
http://tnvelaivaaippu.gov.in என்ற இணையதள முகவரியில் விண்ணப்பத்தினை பதிவிறக்கம் செய்து அனைத்து பகுதிகளையும் முழுமையாக பூர்த்தி செய்து சமர்ப்பிக்கலாம் அல்லது தேனி மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலரை தொடர்புகொண்டு விண்ணப்பத்தினை இலவசமாக பெற்றுக் கொண்டு பயனடையுமாறு தேனி மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.
உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க
உங்கள் நகரத்திலிருந்து(தேனி)
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.