தேனி மாவட்டம் கம்பம் நகராட்சியில் உள்ள 33 வார்டுகளிலும் 3000த்திற்கும் மேற்பட்ட மரக்கன்றுகள் நடப்படுவதற்கான துவக்க நிகழ்ச்சி கம்பம் பகுதியில் நடைபெற்ற நிலையில் நிகழ்வின் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட தங்க தமிழ்ச்செல்வன் மரம் நடுவதின் அவசியம் குறித்து எடுத்துரைத்தார்.
மரக்கன்று நடும் நிகழ்வு
தேனி மாவட்டம் கம்பம் நகராட்சியில் மொத்தம் 33 வார்டுகள் உள்ளது. 70,000-க்கும் மேல் மக்கள் தொகை கொண்ட கம்பம் நகராட்சியை பசுமை நகரமாக மாற்ற வேண்டும் என்ற நோக்கத்தில் கம்பம் நகராட்சி மற்றும் பி த சேஞ்ச் டிரஸ்ட் இணைந்து கம்பம் பகுதியில் உள்ள 33 வார்டுகளிலும் சுமார் 3,000 மேற்பட்ட மரக்கன்றுகளை நட்டு நகராட்சியை பசுமை நகரமாக்கும் முயற்சியில் இறங்கியுள்ளனர் .
கம்பம் நகராட்சி மற்றும் பி த சேஞ்ச் டிரஸ்ட் இணைந்து நடத்தும் மரக்கன்று நடும் நிகழ்வு கம்பம் பகுதியில் உள்ள நந்தகோபாலசுவாமி நகர் 32 வது வார்டு பகுதியில் அமைந்துள்ள நகராட்சி பூங்காவில் தொடங்கப்பட்டது.
கம்பம் நகரமன்றத் தலைவர் வனிதா நெப்போலியன் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில், சிறப்பு விருந்தினர்களாக முன்னாள் டெல்லி பிரதிநிதி பெ.செல்வேந்திரன், முன்னாள் எம்எல்ஏ தங்கதமிழ்செல்வன் ஆகியோர் கலந்து கொண்டனர் .
கம்பம் பகுதி முழுவதிலும் 3,000 மரக்கன்றுகள் பல கட்டங்களாக நடப்பட உள்ளது. நாளொன்றுக்கு ஒவ்வொரு வார்டாக தேர்வு செய்யப்பட்டு வேப்பமரம், புங்க மரம், தண்ணீர் காய் மரம் உள்ளிட்ட மரங்கள் நடப்பட உள்ளது.
தங்க தமிழ்ச்செல்வன் அறிவுரை
அனைத்து பகுதிகளிலும் மரம் நடுபட வேண்டிய அவசியம் குறித்தும் மரம் நடுவதில் தனி நபருக்கு உள்ள பொறுப்புகள் குறித்தும் இந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட முன்னாள் எம்எல்ஏ தங்க தமிழ்ச்செல்வன் பேசினார்.
மேலும் தற்போதைய காலகட்டத்தில் அமேசான் காடுகளின் ஒரு பகுதிகள் அழிவை நோக்கி செல்வதாகவும் இதனால் பல சுற்றுச்சூழல் பாதிப்புகள் ஏற்படும் நிலை உள்ளதாகவும் கூறினார். பொதுமக்கள் ஒவ்வொருவரும் தங்களது வீட்டில் மரம் நட வேண்டும் எனவும் மரம் நடும் பொழுது உயர் மின்னழுத்த மின்சார வயர்கள் செல்லாத இடத்தில் மரம் நட வேண்டும் எனவும் கூறினார்.
கம்பம் பகுதியில் நடப்பட உள்ள மூவாயிரம் மரக்கன்றுகள் நடப்பட்ட பின்னர் ஏதேனும் சேதாரமோ அல்லது தண்ணீர் ஊற்றாமல் பராமரிக்கப்படாமல் இருந்தால் உடனடியாக துப்புரவு பணியாளர்கள் கம்பம் நகராட்சி அலுவலக பணியாளரிடம் தெரிவித்து மீண்டும் மரத்தை நட வேண்டும் அல்லது பராமரிக்க வேண்டும் எனவும் துப்புரவு பணியாளிடம் கேட்டுக் கொண்டார் தங்க தமிழ்ச்செல்வன்.
இந்த நிகழ்ச்சியில் கம்பம் நகர மன்ற துணைத் தலைவர் சுனோதா செல்வக்குமார், ஆணையாளர் பி.பாலமுருகன், முன்னாள் நகரசபை தலைவர்கள் பி.பாஸ்கரன், பி.ராஜாமணி, எஸ்.டி.டி.இளங்கோவன், டி.டி. சிவக்குமார் உள்ளிட்டோர்களும், கம்பம் பகுதி வார்டு கவுன்சிலர்கள் பொதுமக்கள் என ஏராளமான நபர்கள் கலந்து கொண்டனர்.
இது குறித்து அறக்கட்டளை நிர்வாகி முரளி கிருஷ்ணா கூறுகையில், "எங்களது அறக்கட்டளை மூலம் பல்வேறு சமூக சேவைகளை செய்து வருகிறோம். குறிப்பாக இயற்கை சார்ந்த பல பணிகளை செய்து வருகிறோம். இந்த நிலையில் தேனி மாவட்டம் கம்பம் பகுதியில் உள்ள 33 வார்டுகளிலும் மரங்களை நடுவதற்கு நகராட்சி நிர்வாகத்துடன் ஒத்துழைத்து, மரங்களை நட்டு, பராமரிக்கப் உள்ளோம் என பி தி சேஞ்ச் அறக்கட்டளை நிர்வாகி தெரிவித்தார்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Local News, Theni