Home /theni /

தேனியில் கோலாகலமாக நடைபெற்ற சனீஸ்வர பகவான் - நீலாதேவி திருக்கல்யாணம்

தேனியில் கோலாகலமாக நடைபெற்ற சனீஸ்வர பகவான் - நீலாதேவி திருக்கல்யாணம்

சனீஸ்வர

சனீஸ்வர பகவான் திருக்கல்யாணம்

தேனி மாவட்டத்தில் 3000 ஆண்டு பழமை வாய்ந்த புகழ்பெற்ற சுயம்பு குச்சனூர் சனீஸ்வர பகவான் - நீலாதேவி திருக்கல்யாணம் நடைபெற்றது.

தேனி மாவட்டத்தில் 3,000 ஆண்டு பழமை வாய்ந்த புகழ்பெற்ற சுயம்பு குச்சனூர் சனீஸ்வர பகவான் - நீலாதேவி திருக்கல்யாணம் நடைபெற்றது. ஏராளமான பெண்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

திருக்கல்யாணம் :-

சனீஸ்வர பகவானுக்கு பல்வேறு இடங்களில் திருத்தலங்கள் இருந்தாலும் தேனி மாவட்டத்தில் குச்சனூரில் அமைந்துள்ள குச்சனூர் சனீஸ்வர பகவான் திருத்தலம் சுயம்புவாக உருவாகி சுமார் மூவாயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய கோவிலாக கருதப்பட்டு அன்று முதல் பூஜை புனஸ்காரங்கள் செய்து வணங்கி வருகின்றனர்.

ஆடி மாதத்தில் பிரமமோற்சவத்தை முன்னிட்டு மூன்றாவது வெள்ளிக்கிழமை சனீஸ்வர பகவானுக்கும் நீலாதேவிக்கும் திருக்கல்யாணம் விழா நடைபெற்றது. சனீஸ்வர பகவானின் மனைவி நீலாதேவிக்கு உருவம் கிடையாது என்பதால் கும்பத்தில் நீலாதேவி உருவம் அமைத்து அந்த கும்பத்திற்கு சனீஸ்வர பகவான் தாலிகட்டும் நிகழ்ச்சி நடத்தப்பட்டது

அவ்வாறு அமைக்கப்பட்ட நீலாதேவியின் உருவம் இன்றிலிருந்து சரியாக மூன்றாவது திங்கட்கிழமை அன்று சுரபி நதியில் கரைக்கப்படும்.

திருக்கல்யாணத்தை முன்னிட்டு தேனி மாவட்டம் மட்டுமல்லாது தமிழகம் முழுவதும் இருந்து ஆயிரக்கணக்கான பெண்கள் வந்து குவிந்துள்ளனர். திருக்கல்யாணத்தில் கலந்துகொள்ளும் பெண்களுக்கு மஞ்சள் கயிறு, வளையல், குங்குமம், மஞ்சள் என்று பிரசாத பொருட்கள் வழங்கப்பட்டன.
Published by:Karthick S
First published:

Tags: Local News, Theni

அடுத்த செய்தி