முகப்பு /தேனி /

தேனி சிந்தலைச்சேரி அன்னை தெரசா கல்லூரியில் சமத்துவ பொங்கல் விழா.. கபடி, உறியடி என களைகட்டிய விளையாட்டு போட்டிகள்..

தேனி சிந்தலைச்சேரி அன்னை தெரசா கல்லூரியில் சமத்துவ பொங்கல் விழா.. கபடி, உறியடி என களைகட்டிய விளையாட்டு போட்டிகள்..

X
தேனி

தேனி

தேனி மாவட்டம் சிந்தலைச்சேரி பகுதியில் அமைந்துள்ள மதர் தெரசா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் சமத்துவ பொங்கல் விழா நடைபெற்றது .

  • 1-MIN READ
  • Last Updated :
  • Theni, India

தமிழர்களின் முக்கிய பண்டிகையான பொங்கல் திருவிழா தமிழகமெங்கும் வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டு வருகிறது. பொங்கல் என்பது தமிழர்களால் சிறப்பாகக் கொண்டாடப்படும் ஓர் முக்கிய பண்டிகை ஆகும். இந்த விழா தமிழகம் மட்டுமில்லாமல் வெளிநாடுகளிலும் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்தப் பொங்கல் பண்டிகை தமிழகத்தில் உள்ள அனைத்து பள்ளி கல்லூரிகளிலும் சமத்துவ பொங்கல் விழாவாக கொண்டாடபடுவது வழக்கம்.

அந்த வகையில் தேனி மாவட்டம் சிந்தலச்சேரி பகுதியில் அமைந்துள்ள மதர் தெரசா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் மாணவ, மாணவிகள் ஒன்றிணைந்து கொண்டாடிய சமத்துவ பொங்கல் திருவிழா நடைபெற்றது.

இந்நிலையில், சுமார் 500க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பங்கேற்ற இந்த சமத்துவ பொங்கல் திருவிழாவில், மாணவ, மாணவிகளுக்கு கபடி, சிலம்பம், பானை உடைத்தல் உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டது. இந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக திரைப்பட புகழ் மதன் பங்கேற்று சிறப்பு உரை நிகழ்த்தினார். மேலும் சித்த வைத்தியம் தொடர்பாக கல்லூரி மாணவ, மாணவிகள் அறிந்து கொள்ளும் வகையில் சித்த மருத்துவரான காமாட்சி சித்த மருத்துவம் குறித்து மாணவ, மாணவிகளுக்கு எடுத்துரைத்தார்.

இந்நிகழ்ச்சியில் கல்லூரி முதல்வர் ஆரோக்கிய தீபா, செயலாளர் பாஸ்டின், ஆட்சி மன்ற குழு உறுப்பினர்கள், நிர்வாக குழு உறுப்பினர்கள், கல்லூரி பேராசிரியர்கள் என பலர் கலந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை கணினி அறிவியல் துறை உதவி பேராசிரியர் ஆல்பர்ட் செய்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

First published:

Tags: Local News, Pongal 2023, Theni