ஹோம் /தேனி /

தேனி நாடார் சரஸ்வதி கல்லூரியில் சமத்துவ பொங்கல் திருவிழா

தேனி நாடார் சரஸ்வதி கல்லூரியில் சமத்துவ பொங்கல் திருவிழா

X
தேனி

தேனி

Theni Nadar Saraswati College : தமிழகமெங்கும் கல்வி நிலையங்களில் சமத்துவ பொங்கல் திருவிழா நடைபெற்று வரும் நிலையில் தேனி மாவட்டம் வடபுதுப்பட்டி பகுதியில் அமைந்துள்ள நாடார் சரஸ்வதி கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் சமத்துவ பொங்கல் விழா நடைபெற்றது. 

மேலும் படிக்கவும் ...
  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Theni, India

தமிழர்களின் முக்கிய பண்டிகையான பொங்கல் திருவிழா தமிழகமெங்கும் வெகு விமர்சையாக கொண்டாடப்படுகிறது. தமிழர்களால் சிறப்பாக கொண்டாடப்படும் பொங்கல் திருவிழா தமிழகம் முழுவதிலும் உள்ள கல்வி நிலையங்களில் நடைபெறுவது வழக்கம். மேலும், இந்த விழா தென்னிந்தியா, இலங்கை, மலேசியா, சிங்கப்பூர், ஐரோப்பிய நாடுகள், வட அமெரிக்கா, தென் ஆப்பிரிக்கா, மொரிஷியஸ் என தமிழர்கள் வாழும் அனைத்து நாடுகளிலும் கொண்டாடப்படுகிறது.

பொங்கல் பண்டிகை உழைக்கும் மக்கள் இயற்கை தெய்வமாக கருதப்படும் சூரியனுக்கும், மற்ற உயிர்களுக்கும் சொல்லும் ஒரு நன்றியறிதலாக கொண்டாடப்படுகிறது. இந்த பண்டிகை இந்து கடவுளான சூரிய தேவனுக்கும், இயற்கைக்கும் அர்ப்பணிக்கப்பட்டது. பொங்கல் பண்டிகை தமிழ்நாட்டில் வெகு விமர்சையாக கொண்டாடப்படுவதால் பள்ளி, கல்லூரிகளில் சமத்துவ பொங்கல் விழா நடைபெறுவது வழக்கம்.

அந்த வகையில் தேனி மாவட்டம் வடபுதுப்பட்டி பகுதியில் அமைந்துள்ள தேனி மேலப்பேட்டை இந்து நாடார்கள் உறவின்முறை நாடார் சரஸ்வதி கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் சமத்துவ பொங்கல் திருவிழா நடைபெற்றது. மாணவ, மாணவிகள் ஜாதி மத பேதம் இன்றி அனைவரும் கொண்டாடக்கூடிய சமத்துவ பொங்கல் திருவிழாவில் சுமார் 2500 மேற்பட்ட மாணவ, மாணவிகள் பங்கேற்றனர். மேலும் மாணவ, மாணவிகளுக்கு கபடி, சிலம்பம், பானை உடைத்தல் உள்ளிட்ட பல்வேறு போட்டிகளும் நடைபெற்றது.

நாடார் சரஸ்வதி கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் இயற்கைக்கு நன்றி செலுத்தும் விதமாகவும் தமிழரின் பாரம்பரியத்தை உலகறிய செய்யும் வகையில் தமிழர் திருநாளான சமத்துவ பொங்கல் திருவிழா நடத்தப்பட்டதாக கல்வி நிலைய அலுவலர்கள் தெரிவித்தனர். இந்நிகழ்ச்சியில் தலைவர் ராஜ்மோகன் துணைத்தலைவர் கணேஷ், பொதுச் செயலாளர் ஆனந்தவேல் பழனியப்பன் மற்றும் ஆட்சி மன்ற குழு உறுப்பினர்கள் நிர்வாக குழு உறுப்பினர்கள் கல்லூரி பேராசிரியர்கள் என பலர் கலந்து கொண்டனர்.

First published:

Tags: Local News, Pongal 2023, Theni