ஹோம் /தேனி /

சேலம் ஃபேமஸ் தட்டுவடை செட் இப்போது தேனியிலும் விற்பனை...

சேலம் ஃபேமஸ் தட்டுவடை செட் இப்போது தேனியிலும் விற்பனை...

X
சேலம்

சேலம் தட்டுவடை செட்

Theni District News : சேலம் மாவட்டத்தில் மிகவும் புகழ்பெற்ற சேலம் தட்டுவடை செட் கடையை தேனியில் தொடங்கி மாதம் 20 ஆயிரம் ரூபாய் வருமானம் பெற்று வருகிறார் தேனி இளைஞர் வள்ளிக்கண்ணன் .

  • Local18
  • 2 minute read
  • Last Updated :
  • Theni, India

மாலை நேர சிற்றுண்டிகளான பானி பூரி, மசால் பூரி, பேல் பூரி, நூடுல்ஸ் பிரைட் ரைஸ் காளான் உள்ளிட்டவைகளின் விற்பனை அமோகமாக இருந்தாலும் தற்போது தேனி மாவட்டத்தில் சேலம் தட்டுவடை விற்பனை கொடிகட்டி பறக்கிறது.

தேனி மாவட்டம் தேனி நகரில் பழைய பத்தர அலுவலகம் பின்புறம், சேலம் மாவட்டத்தில் புகழ்பெற்ற சேலம் தட்டுவடை செட், முருக்கு நொறுக்கு கடையை தொடங்கி நடத்தி வருகிறார் வள்ளிக்கண்ணன். இவர் தனது நண்பர்களுடன் சேலம் மாவட்டத்திற்கு சொந்த வேலைக்காக சென்று இருந்தபோது அங்கு மாலை சிற்றுண்டி சாப்பிடலாம் என கடைக்கு சென்று உள்ளார்.

சேலம் மாவட்டம் முழுவதும் சாலையோரங்களில் பெரும்பாலும் சேலம் தட்டுவடை செட் கடையே இருந்ததையும் அந்த கடைகளில் மக்களின் கூட்டம் அதிகமாக இருப்பதையும் கண்டுள்ளார்.

இதையும் படிங்க : தேனியில் இயற்கை எழில் கொஞ்சும் சுற்றுலா இடங்கள்... ஒருமுறையாவது சென்று வாருங்கள்.....

தட்டை மற்றும் காய்கறிகளால் ஆன தட்டு வடைக்கு மக்கள் அதிகம் ஆதரவு கொடுப்பதை அறிந்த இவர் தேனி மாவட்டத்தில் தட்டுவடை செட் கடை இல்லாததை அறிந்து தட்டு வடை செட் கடையை தொடங்கலாம் என்ற யோசனை இவருக்கு வந்துள்ளது.

உடனடியாக தட்டுவடை எவ்வாறு செய்வது மற்றும் முறுக்கு நொறுக்கு உள்ளிட்ட பொருட்கள் தயாரிப்பு நுணுக்கங்களை கற்றுக்கொண்டு தட்டுவடை கடையை தொடங்கியுள்ளார். தொடங்கிய நாள் முதல் மக்களின் ஆதரவு அதிகமாக உள்ளது என்கிறார் கடையின் உரிமையாளர் வள்ளிக்கண்ணன்.

தேனி மாவட்டத்தில் முதல்முறையாக இவர் இந்த கடையை ஆரம்பித்ததாகவும் , பள்ளி மாணவர்கள் முதல் பெரியோர்கள் வரை இதற்கு ஆதரவு கொடுப்பதாகவும், முழுக்க முழுக்க ஆர்கானிக் ஆக கேரட் பீட்ரூட் வீட்டை பொருட்களால் தயார் செய்யப்படுவதால் மக்களின் ஆதரவு அமோகமாக உள்ளது எனவும் தெரிவித்தார்.

தற்போது இவர் முறுக்கு செட், தட்டுவடை செட், ஆனியன் செட், பூண்டு செட், மாங்காய் செட், வெள்ளரி செட், தக்காளி செட், குடல் செட், ஜாம்செட், ஊறுகாய் செட், தயிர் செட், நொறுக்கல், பன் செட், பட்டர் பன், முட்டை செட், குல்கந்து செட், முட்டை நொறுக்கல் , ஸ்பெஷல் செட் உள்ளிட்ட பல வகையான பொருட்களை 20 ரூபாய் முதல் 40 ரூபாய் வரை தயார் செய்து விற்பனை செய்து வருகிறார்.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

மாலை 5 மணிக்கு கடையை தொடங்கி இரவு 10 மணி வரை கடை நடத்துவதாகவும் மாதம் 20 ஆயிரம் ரூபாய் வருமானம் பெறுவதாகவும் கூறுகிறார்.

First published:

Tags: Local News, Theni