ஹோம் /தேனி /

ஊரக வாழ்வாதார இயக்க காலிப்பணியிடம் ரூ.15,000 சம்பளம் - தேனி மாவட்டத்தினருக்கு முன்னுரிமை..

ஊரக வாழ்வாதார இயக்க காலிப்பணியிடம் ரூ.15,000 சம்பளம் - தேனி மாவட்டத்தினருக்கு முன்னுரிமை..

ஊரக வாழ்வாதர இயக்கம்

ஊரக வாழ்வாதர இயக்கம்

Theni District | தேனி மாவட்டத்தில் ஊரக வாழ்வாதார இயக்கத்தில் காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதில் தேனி மாவட்டத்தை சோர்ந்த இளைஞர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படுகிறது.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Theni, India

தேனி மாவட்டத்தில் ஊரக வாழ்வாதார இயக்கத்தில் காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதில் தேனி மாவட்டத்தை சோர்ந்த இளைஞர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படுகிறது. மேலும், இந்த ஊரக வாழ்வாதர இயத்தில் பணியில் அமர்த்தப்படுவோருக்கு ரூ.15000 வரை சம்பளம் வழங்கப்படுகிறது.

இது குறித்து, தேனி மாவட்ட நிர்வாகம் சார்பில் செய்தி குறிப்பு வெளியிட்டுள்ளது. அதில் கூறப்பட்டுள்ளதாவது:- இயக்க மேலாண்மை அலகில் காலியாக உள்ள வட்டார இயக்க மேலாளர், வட்டார ஒருங்கிணைப்பாளர் பணியிடங்கள் தற்காலிகமாக தொகுப்பூதிய அடிப்படையில் நிரப்பப்பட உள்ளன.

வட்டார இயக்க மேலாளர் பணிக்கு ஏதேனும் ஒரு பாடப் பிரிவில் பட்டபடிப்பு மற்றும் 6 மாத கால கணினி சான்றிதழ் படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். கணினி அறிவியல், கணினி பயன்பாடியல் பட்டதாரிகளுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.

இந்த வாழ்வாதாரத் திட்டம் போன்ற திட்டப் பணிகளில் 3 ஆண்டுகள் முன் அனுபவம் பெற்றிருக்க வேண்டும். தேனி மாவட்டத்தை சேர்ந்தவராகவும், கடந்த 2022, அக்டோபர் 1 ஆம் தேதியன்று 28 வயதுக்குட்பட்டவராகவும் இருக்க வேண்டும். இந்தப் பணிக்கு தொகுப்பூதியமாக மாதம் ரூ.15 ஆயிரம் வழங்கப்படும்.

Must Read : மூலிகை கலந்த அருவியில் குளியல் போடனுமா உடனே தென்காசிக்கு சுற்றுலா போங்க!

வட்டார ஒருங்கிணைப்பாளா் பணிக்கு ஏதேனும் ஒரு பாடப் பிரிவில் பட்டப் படிப்பு, 6 மாத கால கணினி சான்றிதழ் படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். வாழ்வாதாரத் திட்டம் போன்ற திட்டப் பணிகளில் 2 ஆண்டுகள் முன் அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

அந்தந்த வட்டாரத்தில் குடியிருப்பவராகவும், கடந்த 2022, அக்டோபர் 1ஆம் தேதி அன்று 28 வயதுக்குள்பட்டட் வராகவும் இருக்க வேண்டும். இந்தப் பணிக்கு தொகுப்பூதியமாக மாதம் ரூ. 12 ஆயிரம் வழங்கப்படும்.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

தகுதியுள்ள பெண்கள், திட்ட இயக்குநா், தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம், ஒருங்கிணைந்த அலுவலக வளாகம், ஊரக வளா்ச்சி மற்றும் ஊராட்சித் துறை, தேனி என்ற முகவரியில் நவம்பர் 19ம் தேதிக்குள் நேரில் விண்ணப்பிக்க வேண்டும்.

இது குறித்த விவரத்தை மாவட்டட் மகளிா் திட்ட அலுவலகத்தில் நேரிலும், தொலைபேசி எண்: 04546-255203-ல் தொடா்பு கொண்டும் தெரிந்து கொள்ளலாம் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Published by:Suresh V
First published:

Tags: Job, Local News, Theni