முகப்பு /தேனி /

தேனி மாவட்ட பெண்களுக்கு அருமையான வாய்ப்பு.. தொழில்முனைவோராக்கும் இலவச பயிற்சி மையம் பற்றி தெரியுமா?

தேனி மாவட்ட பெண்களுக்கு அருமையான வாய்ப்பு.. தொழில்முனைவோராக்கும் இலவச பயிற்சி மையம் பற்றி தெரியுமா?

X
தேனி

தேனி மாவட்ட பெண்களுக்கு அருமையான வாய்ப்பு

Theni District News | தேனி மாவட்டத்தில் உள்ள கனரா வங்கி சுய வேலைவாய்ப்பு பயிற்சி நிலையத்தில் பெண்களுக்கான இலவச மெஷின் எம்ராய்டரி மற்றும் தையல் பயிற்சி நடைபெற்று வருகிறது. 

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Theni, India

தேனி தாலுகா அலுவலகம் எதிர்ப்புறம் அமைந்துள்ள கனரா வங்கி தேனி ஊரக சுய வேலைவாய்ப்பு பயிற்சி நிலையத்தில் கிராமப்புற பொதுமக்களை தொழில் முனைவோராக்கும் நோக்கத்தோடு பல்வேறு இலவச தொழிற்பயிற்சிகள் நடத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் தற்போது தேனி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள கிராமப்புற பெண்களை தொழில் முனைவோராக்கும் நோக்கத்தோடு 30 நாட்கள் நடைபெறும் இலவச தையல் மற்றும் எம்ப்ராய்டரி பயிற்சி வகுப்புகள் நடைபெற்ற வருகிறது.

இந்த இலவச பயிற்சி வகுப்பில் தேனி அரண்மனை புதூர், திம்மரச நாயக்கனூர் , அல்லிநகரம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து சுமார் 30க்கும் மேற்பட்ட பெண்கள் கலந்துகொண்டு இலவச பயிற்சியை கற்று வருகின்றனர். இந்த பயிற்சி வகுப்பில் பெண்களுக்கு தையல் பயிற்சி, எம்ராய்டரி, ஆரி ஒர்க், ஓவியம், துணிகளில் ஓவியம் வரைதல் உள்ளிட்ட பல்வேறு வகையான பயிற்சிகள் பயிற்சி வகுப்பில் கலந்துகொண்ட பெண்களுக்கு அளிக்கப்பட்டு வருகிறது.

RSETI ( RURAL SELF EMPLOYMENT TRAINING INSTITUTE )-ல் இலவசமாக பயிற்சி அளிக்கப்பட்டாலும் தேர்ந்தெடுக்கப்பட்ட பயிற்சியாளர்கள் மூலம் தரமான முறையில் பயிற்சி அளிக்கப்படுவதாக பயிற்சி வகுப்பில் கலந்துகொண்டு பயிற்சி பெற்று வரும் பெண்கள் கூறினர். தற்போது தையல் தொழில் அதிகமாக வளர்ந்து வரும் நேரத்தில் பெண்கள் தையல் மற்றும் எம்பிராய்டிங் தொழில் பயிற்சியை தேர்ந்தெடுத்து பயிற்சி பெற்று வருகின்றனர் எனவும், பயிற்சி வகுப்பின் நிறைவு நாளில் பயிற்சியில் கலந்துகொண்ட பெண்களுக்கு தேர்வு வைக்கப்பட்டு தேர்வில் வெற்றி பெற்ற பெண்களுக்கு சான்றிதழ் வழங்கப்படும் என பயிற்சியாளர் துர்கா பாரதி கூறினார்.

இதையும் படிங்க : கேஸ் சிலிண்டருக்கு பணம் கேட்ட மாமனார்... கோடாரியால் வெட்டி கொன்று நாடகமாடிய மருமகன்!

மேலும் பெண்கள் வீட்டில் இருந்தபடியே தொழில் தொடங்குவதற்கு இந்த பயிற்சிகள் உதவும் எனவும், தொழில் தொடங்குவதற்கு ஆர்வம் காட்டும் பெண்களுக்கு அரசின் திட்டங்கள் மூலம் கடன் உதவி வாங்குவதற்கும் உதவிகள் அளிக்கப்படுவதாகவும் தெரிவித்தார்.

இலவச பயிற்சி வகுப்புகள் குறித்து மேலும் தகவல்கள் அறிய விரும்புவோர் 95856 68811 என்ற மொபைல் எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

First published:

Tags: Local News, Theni