ஹோம் /தேனி /

தேனியில் சாலை பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு பேரணி - ஏராளமானோர் பங்கேற்பு

தேனியில் சாலை பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு பேரணி - ஏராளமானோர் பங்கேற்பு

X
சாலை

சாலை பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு பேரணி

Theni District News : தேனி மாவட்டம் தேனி அருகே உள்ள பொம்மைய கவுண்டன்பட்டி சாலைப் பிள்ளையார் கோவில் முன்பாக இன்று தலைகவசம் அணி வகுப்பு பேரணியை தேனி டிஎஸ்பி கொடியசைத்து துவக்கி வைத்தார்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Theni, India

தேனி அல்லிநகரம் நகராட்சிக்கு உட்பட்ட பொம்மையகவுன்டன்பட்டி சாலைப் பிள்ளையார் கோயில் முன்பாக தேனி போக்குவரத்து காவல்துறை மற்றும் அமைதி அறக்கட்டளை சார்பில் இருசக்கர வாகன விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.

சாலை விதிகளைப்பின்பற்றுவது தொடர்பாகவும் தலைக்கவசம் அணிவது தொடர்பாகவும் காவல்துறையினர் சார்பில் தலைக்கவச விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.

தலைக் கவசம் அணிவது தொடர்பாக நடைபெற்ற இந்த விழிப்புணர்வு டூவீலர் பேரணியை தேனி டிஎஸ்பி பார்த்திபன் கொடியசைத்து துவக்கி வைத்தார்.

இப்பேரணி பொம்மையகவுண்டன்பட்டி சாலைப் பிள்ளையார் கோயிலில் துவங்கி, நேரு சிலை வழியாக சென்று மதுரை ரோட்டில் உள்ள பங்களா மேட்டில் நிறைவடைந்தது.

இதையும் படிங்க : தேனி மாவட்டத்தில் விளையாட்டு பயிற்சியாளர் பணி... கலெக்டர் முக்கிய அறிவிப்பு

இப்பேரணியில் 30-க்கும் மேற்பட்ட இருசக்கர வாகனங்களில் சென்ற காவல்துறை அதிகாரிகளும் பொதுமக்களும் தன்னார்வலர்களும் தலைக்கவசங்கள் அணிந்து ஊர்வலமாக சென்று விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.

மேலும் இந்த ஊர்வலத்தில் ஆட்டோ ஓட்டுநர்களும் கலந்து கொண்டு ஆட்டோக்கள் மூலமும், துண்டு பிரசுரங்கள் வழங்கியும் தலைக்கவசம் அணிவது குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

இந்நிகழ்ச்சியில் வழக்கறிஞர் சங்கம் தலைவர் முத்துராமலிங்கம் இந்து எழுச்சி முன்னணி மாவட்ட தலைவர் ராமராஜ் உள்ளிட்ட நிர்வாகிகள் தன் ஆர்வலர்கள் பொதுமக்கள் என திரளாக கலந்து கொண்டனர்.

First published:

Tags: Local News, Theni