ஹோம் /தேனி /

இரவு நேரங்களில் மேகமலைக்கு செல்வதில் உள்ள கட்டுப்பாடுகள் தொடரும் - வனத்துறையினர் திட்ட வட்டம்

இரவு நேரங்களில் மேகமலைக்கு செல்வதில் உள்ள கட்டுப்பாடுகள் தொடரும் - வனத்துறையினர் திட்ட வட்டம்

மேகமலைக்கு செல்வதில் உள்ள கட்டுப்பாடுகள் தொடரும்

மேகமலைக்கு செல்வதில் உள்ள கட்டுப்பாடுகள் தொடரும்

Theni District News : தேனி மாவட்டம் சின்னமனூர் அருகே உள்ள மேகமலைக்கு பொதுமக்கள் இரவு நேரங்களில் செல்வதற்கு பல்வேறு கட்டுப்பாடுகள் உள்ள நிலையில், கட்டுப்பாடுகளை தளர்வு செய்ய வேண்டும் என மேகமலை பொதுமக்கள் தென்பழனி வனத்துறை சோதனைசாவடியை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம் செய்தனர்.

மேலும் படிக்கவும் ...
  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Theni, India

தேனி மாவட்டம் சின்னமனூர் அருகே உள்ள மேகமலைக்கு பொதுமக்கள் இரவு நேரங்களில் செல்வதற்கு பல்வேறு கட்டுப்பாடுகள் உள்ள நிலையில், கட்டுப்பாடுகளை தளர்வு செய்ய வேண்டும் என மேகமலை பொதுமக்கள் தென்பழனி வனத்துறை சோதனைசாவடியை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம் செய்தனர்.

தேனி மாவட்டம் சின்னமனூர் அருகே மேற்குத் தொடர்ச்சி மலையில் உள்ள மேகமலை ,வெண்ணியாறு மகாராஜா மெட்டு உள்ளிட்ட 7 கிராமங்களில் ஏராளமான பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இவர்கள் காப்பி, தேயிலை ,ஏலக்காய் தோட்டங்களில் விவசாய பணிகளை செய்து வருகின்றனர்.

மேகமலை, மகாராஜா மெட்டு உள்ளிட்ட 7 மலைகிராம மக்கள் மருத்துவமனை மற்றும் அத்தியாவசிய தேவைக்காக மேகமலை மலைப்பகுதிகளில் எந்த வசதியும் இல்லாததால் அருகிலுள்ள சின்னமனூர் பகுதிக்கு தான் வந்து செல்ல வேண்டிய சூழல் உள்ளது.

இந்நிலையில், வனத்துறையினர் மாலை 6 மணிக்கு மேல் மலைப்பாதை வழியாக மேகமலைக்கு சென்றடைய பொதுமக்களை அனுமதிக்க மறுப்பதாகவும், தாங்கள் கொண்டு செல்லும் கட்டுமான பொருட்கள் மற்றும் உணவு பொருட்களை பறித்து வைத்துகொள்வதாகவும் வனத்துறையினர் மீது மேகமலை பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

இதையும் படிங்க : ஜோத்பூர் பேலஸ் போன்ற கலைநயம், கண்களை கவரும் சுவரோவியங்கள்... இது நம்ம போடிநாயக்கனூர் அரண்மனை!

இதனையடுத்து தென்பழனியில் அமைத்ததுள்ள வனத்துறை சோதனை சாவடியை மேகமலை உள்ளிட்ட ஏழு கிராம பொதுமக்கள் மற்றும் தோட்ட தொழிலாளர்கள் சுமார் 50க்கும் மேற்பட்ட நபர்கள் தென்பழனி வனத்துறை சோதனை சாவடியை முற்றுகையிட்டு, மேகமலை பொதுமக்கள் 24 மணி நேரமும் இந்த கட்டுப்பாடு இன்றி செல்வதற்கு அனுமதி கோரி திடீரென ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

தகவலறிந்து சம்பவ இடத்திர்க்கு வந்த ஓடைப்பட்டி காவல் துறையினர் ஆர்ப்பாட்டம் நடத்தியவர்களை கைது செய்து ஓடைப்பட்டியில் உள்ள தனியார் மண்டபத்தில் அடைத்தனர் .

இந்த முற்றுகை ஆர்ப்பாட்டத்தால் மேகமலை செல்லும் சாலையில் பரபரப்பு ஏற்பட்டது.

இதையும் படிங்க : மேகமலை வனப்பகுதிகளில் தொடர் மழை.. சின்ன சுருளி அருவியில் ஆர்ப்பரித்து கொட்டும் நீர் - படையெடுக்கும் மக்கள்

இதுகுறித்து வனத்துறை அதிகாரிகள் கூறுகையில், “மேகமலைக்கு மேகமலை பகுதி பொதுமக்கள் இரவு நேரங்களில் மலைப்பாதை வழியாக செல்வது ஆபத்தான ஒன்றாகும். காட்டு விலங்குகளால் பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்பட வாய்ப்பு உள்ளது . இரவு நேரங்களில் சமூகவிரோதிகள் மூலம் போதைப் பொருட்கள் கடத்தப்படுவதற்கு அதிக வாய்ப்புகள் உள்ளது.

இதனால் மேகமலைக்கு இரவு நேரங்களில் செல்வதற்கு பல்வேறு கட்டுப்பாடுகள் உள்ளது. இனியும் இதே கட்டுப்பாடுகள் தொடரும் என்பதில் மாற்றமில்லை” என வனத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

Published by:Karthi K
First published:

Tags: Local News, Theni