Home /theni /

சுருளி அருவியில் குளிக்க 9-வது நாளாகத் தடை: சின்னச் சுருளி அருவியில் சுற்றுலா பயணிகள் கூட்டம்

சுருளி அருவியில் குளிக்க 9-வது நாளாகத் தடை: சின்னச் சுருளி அருவியில் சுற்றுலா பயணிகள் கூட்டம்

மாதிரிப் படம்

மாதிரிப் படம்

தேனி மாவட்டத்திலுள்ள சுருளி அருவியில் சுற்றுலாப் பயணிகளுக்கு 9-வது நாளாக தடை விதிக்கப்பட்டுள்ளது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
    தமிழகத்தின் மேற்கு தொடர்ச்சி பகுதிகளை ஒட்டியுள்ள பகுதிகளில் மழை பெய்து வருகிறது.

    இந்நிலையில், பல்வேறு நீர்நிலைகளிலும் மழை நீர் ஆப்பரித்து அருவி போல் கொட்டுகிறது. மேலும் சில சுற்றுலா இடங்களுக்குச் செல்ல சுற்றுலாப் பயணிகளுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

    அந்த இடங்களை வனத்துறையினர் மற்றும் போலீசார் கண்காணித்து வருகின்றனர். மேலும், தேனி மாவட்டத்திலும் பரவலாக மழை கொட்டி வருகின்றது. இங்குள்ள அணைகள் நிரம்பி வழிகின்றன. இந்நிலையில், ஹைவேவிஸ், மேகமலை பகுதியில் மழை பெய்வதால் சின்னச் சுருளி அருவியில் நீர் வரத்து அதிகரித்துள்ளது.

    மேகமலை கோம்பைத்தொழு மலை அடிவாரத்தில் உள்ளது சின்னச்சுருளி அருவி. மேகமலை வன உயிரின சரணாலயத்தில் உள்ள இந்த அருவிக்கு மதுரை, திண்டுக்கல், தேனி, கோவை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர்.

    ஆண்டு முழுவதும் அருவியில் நீர்வரத்து இருக்கும். கடந்த சில நாட்களாக மலைப்பகுதியில் மழை பெய்வதால் அருவியில் நீர் வரத்து அதிகரித்துள்ளது. சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சியுடன் குளித்து செல்கின்றனர்.

    மேலும், சுருளி அருவிக்கும் தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்து வருவதால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால் கடந்த 2-ந்தேதி முதல் அருவியில் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டது. இந்நிலையில் அருவியில் நீா்வரத்து அதிகரித்து வருவதால் சில நேரங்களில் திடீரென வெள்ளப்பெருக்கு ஏற்படுகிறது. இதனால் இன்று 9-வது நாளாக சுருளி அருவியில் சுற்றுலா பயணிகள் குளிக்க வனத்துறையினர் தடை விதித்துள்ளனர். சுருளி அருவியில் தடை விதிக்கப்பட்டுள்ளதன் காரணமாக சின்னச் சுருளியில் பொதுமக்கள் கூட்டம் அலைமோதியுள்ளது.
    Published by:Karthick S
    First published:

    Tags: Local News, Theni

    அடுத்த செய்தி