முகப்பு /தேனி /

முல்லைப் பெரியாறு அணையின் ஆக்கிரமிப்புகளை அகற்ற கோரிக்கை!

முல்லைப் பெரியாறு அணையின் ஆக்கிரமிப்புகளை அகற்ற கோரிக்கை!

X
முல்லைப்

முல்லைப் பெரியாறு அணை

Theni News | முல்லைப்பெரியாறு அணையை கட்டிய கர்னல் ஜான் பென்னிகுவிக் அவர்களது 112-வது நினைவு நாளை முன்னிட்டு தேனி மாவட்டம் லோயரகேம்ப்பில் உள்ள அவரது மணிமண்டபத்தில் விவசாயிகள் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினர்.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Theni, India

தேனி முல்லைப் பெரியாறு அணை ஆக்கிரமிப்புகளை அகற்ற கோரிக்கை எழுந்துள்ளது.0

மதுரை, தேனி, திண்டுக்கல், சிவகங்கை, ராமநாதபுரம் உள்ளிட்ட 5 மாவட்ட மக்களின் குடிநீர் மற்றும் விவசாய பாசனத்திற்கு நீர் ஆதாரமாக விளங்குவது முல்லைப் பெரியாறு அணை. இந்த அணையைக் கட்டிய ஆங்கிலேயப் பொறியாளர் கர்னல் ஜான் பென்னிகுவிக். கர்னல் ஜான் பென்னிகுவிக்கின் பிறந்த தினம் மற்றும் நினைவு தினத்தை தென்தமிழக மக்கள் வெகு விமர்சையாக அனுசரித்து வருகின்றனர்.

இதன் தொடர்ச்சியாக மறைந்த கர்னல் ஜான் பென்னி குவிக்கின் 112வது நினைவு தினத்தை முன்னிட்டு ஒருங்கிணைந்த 5 மாவட்ட பெரியார் வைகை பாசன விவசாய சங்கத்தினர் மற்றும் கூடலூர் பகுதி விவசாயிகள் உள்ளிட்ட ஏராளமானோர் லோயர்கேம்ப்பில் அமைந்துள்ள கர்னல் ஜான் பென்னிகுவிக்கின் சிலைக்கு மாலை அணிவித்து மெலுகுவர்த்தி ஏந்தி மவுன அஞ்சலி செலுத்தினர்.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

இதுகுறித்து ஒருங்கிணைந்த 5 மாவட்ட பெரியாறு வைகை பாசன விவசாய சங்கத்தலைவர் எஸ்.ஆர். தேவர் கூறுகையில், “முல்லைப்பெரியாறு அணை பகுதியில் உள்ள பேபி அணையை பலப்படுத்துவதற்கு தடை விதிக்கும் கேரள அரசு மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். முல்லைப்பெரியார் அணை பகுதியில் ஆக்கிரமிப்பு களை அகற்றுவதற்கும் பென்னிகுவிக் மணி மண்டபத்தை சுற்றுலாத்துறை இடம் ஒப்படைத்து பராமரிக்க தமிழக முதல்வர் துரித நடவடிக்கை எடுக்க வேண்டும்”  என வலியுறுத்தி கோரிக்கை வைத்தார்

First published:

Tags: Local News, Theni