ஹோம் /தேனி /

கம்பம் பள்ளத்தாக்கு பகுதிகளில் அறுவடைக்கு தயாரான செங்கரும்புகள்.. அரசு நடவடிக்கையால் விவசாயிகள் ஹேப்பி.!

கம்பம் பள்ளத்தாக்கு பகுதிகளில் அறுவடைக்கு தயாரான செங்கரும்புகள்.. அரசு நடவடிக்கையால் விவசாயிகள் ஹேப்பி.!

X
கரும்பு

கரும்பு அறுவடை 

Theni Chinnamanur Red sugarcane| தேனி மாவட்டம் சின்னமனூர் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கரும்பு நல்ல விளைச்சலைக் கண்டு, அறுவடைக்கு தயார் நிலையில் உள்ளது. விவசாயிகளிடமிருந்து அரசு நேரடியாக கரும்பு ஒன்று 33 ரூபாய்க்கு கொள்முதல் செய்வதால் கரும்பு விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். 

மேலும் படிக்கவும் ...
  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Theni | Theni Allinagaram

தேனி மாவட்டம் சின்னமனூர் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கரும்பு நல்ல விளைச்சலைக் கண்டு, அறுவடைக்கு தயார் நிலையில் உள்ளது. விவசாயிகளிடமிருந்து அரசு நேரடியாக கரும்பு ஒன்று 33 ரூபாய்க்கு கொள்முதல் செய்வதால் கரும்பு விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

கரும்பு விவசாயம் :-

தேனி மாவட்டத்தில் நெல், வாழை சாகுபடிக்கு அடுத்தபடியாக கரும்பு அதிக அளவில் பயிரிடப்பட்டு உள்ளது. தேனி மாவட்டத்தில் பல ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் கரும்பு சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. தேவதானப்பட்டி, ஆண்டிப்பட்டி, பெரியகுளம், வாழையாத்துப்பட்டி, பூதிப்புரம், ஆதிப்பட்டி, வளையபட்டி சின்னமனுார், உத்தமபாளையம் பகுதியில் சுமார் ஆயிரக்கணக்கான ஏக்கரில் கரும்பு சாகுபடி செய்யப்படுகிறது.

குறிப்பாக கம்பம் பள்ளத்தாக்குப் பகுதிகளில் உத்தமபாளையம் சின்னமனூர் பகுதிகளில் இந்த ஆண்டு கரும்பு விளைச்சல் அமோகமாக உள்ளதாகவும், சின்னமனூரில் அறுவடையாகும் கரும்புகள் தமிழ்நாடு மட்டுமல்லாமல் வெளி மாநிலங்களுக்கும் ஏற்றுமதி ஆகும் என இப்பகுதி விவசாயிகள் கூறுகின்றனர்.

இந்த ஆண்டு நல்ல மழை பொழிவு மற்றும் நீர் வரத்து அதிகமாக இருந்ததால், கரும்பு அமோகமாக விளைந்துள்ளதாகவும், விரைவில் அறுவடை பணிகள் தொடங்கும் எனவும் விவசாயிகள் கூறுகின்றனர். பொங்கல் பண்டிகைக்கு இன்னும் சில தினங்களே உள்ள நிலையில், சின்னமனூர் சுற்றுவட்டாரப் பகுதிகளில் தற்போது அறுவடைப் பணிகள் தொடங்கவுள்ளன.

கரும்பு விவசாயிகளிடமிருந்து அரசு நேரடியாக கரும்பு ஒன்று 33 ரூபாய்க்கு கொள்முதல் செய்வதால் கரும்பு விவசாயிகள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளனர். கரும்பு ஆறடி உயரமும், போதுமான அளவு தடிமனும் நோய்த்தாக்களும் இல்லாமல் இருக்க வேண்டும் என்ற நிபந்தனை விதித்து அரசு கரும்பு விவசாயிடமிருந்து கரும்புகளை மொத்தமாக கொள்முதல் செய்ய ஆய்வுகள் முடிந்து தற்போது கரும்புகள் அறுவடைக்கு தயார் நிலையில் உள்ளதாக விவசாயிகள் கூறுகின்றனர்.

மேலும் வெளி வியாபாரிகளிடம் கரும்புகளை விற்கும் பொழுது கடந்த ஆண்டை காட்டிலும் இந்த ஆண்டு கரும்பின் விலை சற்று உயர வாய்ப்பு உள்ளதாகவும் கூறுகின்றனர். விலையேற்றம் இருந்தாலும் விற்பனை அதிகளவில் நடைபெறும் என்ற எதிர்பார்ப்பில் விவசாயிகள் உள்ளதாகவும் கூறுகின்றனர்.

First published:

Tags: Agriculture, Local News, Pongal 2023, Theni