முகப்பு /தேனி /

ரேஷன் கடைகளில் ஏற்படும் சர்வர் பிரச்னைகள்- தேனியில் போராட்டத்தில் இறங்கிய கூட்டுறவு சங்க ஊழியர்கள்

ரேஷன் கடைகளில் ஏற்படும் சர்வர் பிரச்னைகள்- தேனியில் போராட்டத்தில் இறங்கிய கூட்டுறவு சங்க ஊழியர்கள்

X
போராட்டத்தில்

போராட்டத்தில் ஊழியர்கள்

Theni | தேனி மாவட்டம் ஆட்சியர் அலுவலகம் முன்பாக ரேஷன் கடை ஊழியர்கள் போராட்டத்தில் இறங்கினர்.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Theni, India

தேனி மாவட்டம் ஆட்சியர் அலுவலகம் முன்பாக ரேஷன் கடை பயேமெட்ரிக்கில் கார்டுகளுக்கு ஒருமுறை பில் போடும் முறையை அமலாக்க கோரி சிஐடியு சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

கண்டன ஆர்ப்பாட்டம்

தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாக தேனி மாவட்ட கூட்டுறவு ஊழியர்கள் சங்கம் சார்பாக ரேஷன் கடைகளில் பொருட்கள் விநியோகிக்கும் பொழுது ஏற்படும் சர்வர் பிரச்சினைகளை சரி செய்ய கோரி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

நியாய விலை கடைகளில் பொதுமக்களுக்கு பொருட்கள் வழங்கப்பட்டு வரும் நிலையில் ரேஷன் பொருட்கள் விநியோகிக்கும் பொழுது ஏற்படும் சர்வர் பிரச்சினையால் ஊழியர்களுக்கும் பொதுமக்களுக்கும் வாக்குவாதம் ஏற்படும் சூழல் உருவாகியுள்ளதால், சர்வர் பிரச்சனையை உடனடியாக கூட்டுறவுத்துறை சீர் செய்ய வேண்டும் என கோரி தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாக தேனி மாவட்ட கூட்டுறவு ஊழியர்கள் சங்கம் சார்பாக கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

மேலும் ரேஷன் கடைகளில் பயோமெட்ரிக் முறையில் பில் போடும் பொழுது பொதுமக்களின் கை, ரேகை பதிவாகாமல் இருப்பதால் பொதுமக்கள் பொருட்கள் வாங்க முடியாத சூழல் ஏற்பட்டுள்ளதாகவும் தொடரும் சர்வர் பிரச்சினையை உடனடியாக சரி செய்ய கோரியும், PHH மற்றும் AAY உள்ளிட்ட கார்டுகளுக்கு பயோமெட்ரிக் முறையில் ஒரு முறை மட்டும் பில் போடும் செயல்முறையை அமலாக்க வேண்டும் என கூறியும் , நாலு விதமான அரிசி விநியோகம் செய்யும்பொழுது பொதுமக்களுக்கும் ரேஷன் கடை ஊழியர்களுக்கும் மோதல் ஏற்படும் சூழல் உருவாகியுள்ளதால் தரமான அரிசி வழங்கிட வேண்டுமென கூறியும் கண்டன ஆர்ப்பாட்டத்தில் தேனி மாவட்ட கூட்டுறவு ஊழியர் சங்கத்தினர் ஈடுபட்டனர்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் ரேஷன் கடை ஊழியர்கள் மற்றும் தொழிற்சங்க நிர்வாகிகள் பங்கேற்று கண்டன முழக்கங்களை எழுப்பினர்.

First published:

Tags: Local News, Theni