முகப்பு /தேனி /

ராம நவமி பிரம்மோற்சவம்.. தேனி வரதராஜ பெருமாள் கோவிலில் கொடியேற்றம்..

ராம நவமி பிரம்மோற்சவம்.. தேனி வரதராஜ பெருமாள் கோவிலில் கொடியேற்றம்..

X
தேனி

தேனி வரதராஜ பெருமாள் கோவிலில் கொடியேற்றம்

Rama Navami : தேனி மாவட்டம் அல்லிநகரம் பகுதியில் உள்ள ஸ்ரீவரதராஜ பெருமாள் திருக்கோவிலில் 80ம் ஆண்டு ராம நவமி பிரம்மோற்சவத்தை முன்னிட்டு கொடியேற்றும் நிகழ்ச்சி நடைபெற்றது.

  • Last Updated :
  • Theni, India

தேனி மாவட்டம் தேனி அல்லிநகரம் பகுதியில் மிகவும் பழமை வாய்ந்த ஸ்ரீ வரதராஜ பெருமாள் திருக்கோயில் அமைந்துள்ளது. இந்த திருக்கோயிலில் 80ம் ஆண்டு ராம நவமி பிரம்மோற்சவ விழாவை முன்னிட்டு கொடியேற்றம் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் கொடி மரத்துக்கு முன்பாக அமர்ந்திருக்கும் கருடாழ்வாருக்கு, வேதச்சாரியார்கள் பூஜைகளை செய்து தீபாராதனை காட்டினர். இதைத்தொடர்ந்து கொடி மரத்துக்கு சிறப்பு பூஜைகள் செய்யப் பட்டு கொடியேற்றம் நிகழ்ச்சி தொடங்கியது.

இதில் ஏராளமான பொதுமக்கள் கூடியிருக்க கொடி மரத்தில் கொடியேற்றி வைத்து கொடியேற்றும் நிகழ்ச்சி வெகு விமர்சையாக நடைபெற்றது. பின்னர் கொடி மரத்துக்கு வண்ண மலர் மாலைகளால் அலங்கரித்து மீண்டும் தீபாராதனை காட்டப்பட்டது. இந்த கொடியேற்றம் நிகழ்ச்சியில் தேனி அல்லிநகரம் பகுதியை சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் கலந்துகொண்டு கண்டுகளித்து சென்றனர்.

First published:

Tags: Local News, Theni