முகப்பு /தேனி /

தெப்பம்பட்டி ரயில்வே பாலத்தில் தண்ணீர்தேங்கி போக்குவரத்துக்கு பாதிப்பு.. பொதுமக்கள் எடுத்த அதிரடி முடிவு..

தெப்பம்பட்டி ரயில்வே பாலத்தில் தண்ணீர்தேங்கி போக்குவரத்துக்கு பாதிப்பு.. பொதுமக்கள் எடுத்த அதிரடி முடிவு..

X
தெப்பம்பட்டி

தெப்பம்பட்டி ரயில்வே பாலத்தில் தண்ணீர்தேங்கி போக்குவரத்துக்கு பாதிப்பு

Theni News : தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி பகுதியில் பெய்த மழை காரணமாக தெப்பம்பட்டி ரயில்வே பாலத்தில் தண்ணீர் தேங்கி போக்குவரத்துக்கு பாதிப்பு ஏற்பட்டது.

  • 1-MIN READ
  • Last Updated :
  • Theni, India

தேனி மாவட்டம், ஆண்டிபட்டி பகுதியில் கடந்த 2 நாட்களாக மழை பெய்து வருகிறது. ஆண்டிப்பட்டி பகுதியில் பெய்த பலத்த மழையின் காரணமாக ஆண்டிபட்டி-தெப்பம்பட்டி சாலையில் உள்ள ரயில்வே பாலத்தில் மழை தண்ணீர் குளம் போல தேங்கியது.

பள்ளமாக அமைக்கப்பட்ட ரயில்வே மேம்பால சாலையில் சுமார் 2 மீட்டர் வரையில் வாகனங்களை இயக்க முடியாத அளவிற்கு தண்ணீர் தேங்கியிருந்ததால் இந்த சாலையில் போக்குவரத்து அடியோடு துண்டிக்கப்பட்டது. இதனால் இந்த வழித்தடத்தில் எந்த வாகனங்களும் இயக்கப்படவில்லை.

இதனால் கடந்த ஜுன் 1ம் தேதி இரவு‌ நூற்றுக்கணக்கான மக்கள் ரயில்வே பாலத்தில் தேங்கிய தண்ணீரை அகற்றி அந்த வழித்தடத்தில் உடனடியாக போக்குவரத்தை தொடங்க வேண்டும் என்று கூறி தேனி-மதுரை தேசிய நெடுஞ்சாலையில் அமர்ந்து சாலை மறியலில் ஈடுபட்டனர்.

தெப்பம்பட்டி ரயில்வே பாலத்தில் தண்ணீர்தேங்கி போக்குவரத்துக்கு பாதிப்பு

இதையும் படிங்க : ஈரோடு கொடுமணல் பகுதியில் அதிகம் விளையும் இந்தியாவின் கிவி பழம்.. கள்ளிப்பழம் சாப்பிட்டிருக்கீங்களா?

இதனைத்தொடர்ந்து தற்போது காலையில் ரயில்வே பாலத்தில் தண்ணீர் அகற்றப்படாமல் இருந்த நிலையில் ஆட்டோ ஓட்டுநர்கள் சுமார் 20க்கும் மேற்பட்டோர் ஆண்டிபட்டி-தெப்பம்பட்டி சாலையில் பாலத்தின் இருபுறமும் ஆட்டோவை நிறுத்தி மறியலில் ஈடுபட்டனர். இதனால் சுமார் ஒரு மணி நேரத்துக்கு மேலாக இந்த பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. மேலும் இன்று முகூர்த்த நாள் என்பதால் விசேஷ நிகழ்ச்சிக்கு செல்ல முடியாமல் பொதுமக்கள் தவித்து வந்தனர்.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

ஆண்டிபட்டி போலீசார் மறியலில் ஈடுபட்ட ஆட்டோ ஓட்டுநர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி மழை நீரை விரைவில் அகற்றப்படும் என உறுதி அளித்ததை தொடர்ந்து பொதுமக்கள் கலைந்து சென்றனர்

First published:

Tags: Local News, Theni