தேனி மாவட்டம் கம்பம் பள்ளத்தாக்கு பகுதிகளில் சூறைக்காற்றுடன் பெய்த கன மழையினால் கருநாக்க முத்தன்பட்டி பகுதியில் 8,000க்கும் மேற்பட்ட வாழை மரங்கள் சாய்ந்து வீணாகியுள்ளது.
வாழை சேதம் :-
தேனி மாவட்டம் கம்பம் பள்ளத்தாக்கு பகுதி விவசாயம் மிகுந்த பகுதியாகும். இந்த பகுதியில் நெல், வாழை, திராட்சை, பீட்ரூட், கரும்பு போன்றவை பிரதானமாக பயிரிடப்படுகின்றன.
குறிப்பாக கருநாக்கமுத்தம்பட்டி, சுருளிப்பட்டி, குள்ளப்பகவுண்டன்பட்டி, நாராயணத்தேவன்பட்டி மற்றும்அணைப்பட்டி ஆகிய பகுதிகளில் வாழை விவசாயம் மிக முக்கிய விவசாயமாக செய்யப்பட்டு வருகிறது. இந்த பகுதிகளில் சுமார் 3000 ஏக்கருக்கு மேல் வாழை விவசாயம் நடைபெறுகிறது.
தற்போது தேனி மாவட்டத்தில் பரவலாக சாரல் மழை பெய்து வருகிறது . இந்நிலையில், கம்பம் பள்ளத்தாக்கு பகுதிகளில் திடீரென சூறாவளி காற்றுடன் பெய்த கனமழையினால் கம்பம் அருகே உள்ள கருநாக்கமுத்தம்பட்டி ஊராட்சியை சேர்ந்த கதிரேசன், பரமன், ஈஸ்வரன், ஆகிய விவசாயிகளின் நிலங்களில் பயிரிடப்பட்டிருந்த சுமார் 8,000 க்கும் மேற்பட்ட வாழை மரங்கள் சாய்ந்து சேதம் அடைந்துள்ளன.
சேதமடைந்த வாழைகள் அனைத்தும் தார்கள் வெட்டும் நிலையில் இருந்ததால் சுமார் பத்து லட்சம் ரூபாய்க்கும்அதிக மதிப்புள்ள வாழை மரங்கள் வீணாகியதாக விவசாயிகள் கூறினர்.
வாழை சேதம் அடைந்த இடத்திற்கு கர்நாக்கமுத்தன்பட்டி ஊராட்சி மன்ற தலைவர், ஊராட்சி ஒன்றிய கவுன்சிலர் மற்றும் கிராம நிர்வாகி அதிகாரி ஆகியோர் வருகை தந்து சேதம் அடைந்த வாழை மரங்கள் அனைத்தையும் பார்வையிட்டு சென்றனர். வெட்டும் நிலையில் உள்ள வாழைகள் சாய்ந்ததால் விவசாயிகள் கவலை அடைந்து உள்ளனர்.
உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Agriculture, Cumbum, Local News, Theni