ஹோம் /தேனி /

தேனியில் சீறிப்பாய்ந்த மாட்டுவண்டிகள் - ஆரவாரத்துடன் கண்டுகளித்த பொதுமக்கள்

தேனியில் சீறிப்பாய்ந்த மாட்டுவண்டிகள் - ஆரவாரத்துடன் கண்டுகளித்த பொதுமக்கள்

தேனி

தேனி மாட்டு வண்டிப் போட்டி

தேனி மாவட்டம் கூடலூரில் முத்தாலம்மன் கோவில் திருவிழாவை முன்னிட்டு ஐந்து வகை மாடுகளை கொண்டு இரட்டை மாட்டு வண்டி போட்டி நடைபெற்றது.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Kambam (Cumbum), India

தேனி மாவட்டம் கூடலூரில் முத்தாலம்மன் கோவில் திருவிழாவை முன்னிட்டு ஐந்து வகை மாடுகளை கொண்டு இரட்டை மாட்டு வண்டி போட்டி நடத்தப்பட்டது.

இரட்டை மாட்டு வண்டி பந்தயம்

தேனி மாவட்டம் கூடலூரில் உள்ள கிழக்கு முத்தாலம்மன் கோவில் திருவிழாவை முன்னிட்டு, ஒக்கலிகர் காப்பு விவசாயி இளைஞர் அணியினர் சார்பாக இரட்டை மாட்டு வண்டி போட்டி நடத்தப்பட்டது. ஒவ்வொரு ஆண்டும் கூடலூர் பகுதியில் கிழக்கு முத்தாலம்மன் கோவில் திருவிழா வெகுவிமரிசையாக நடைபெறுவது வழக்கம்.

சீறிப் பாயும் மாடுகள்

இந்தாண்டு முத்தாலம்மன் கோயில் திருவிழாவை முன்னிட்டு இன்று காலை 6 மணிக்கு கூடலூர் குமுளி பைபாஸ் சாலையில் இரட்டை மாட்டு வண்டி போட்டி நடத்தப்பட்டது.

சீறிப் பாயும் மாடுகள்

வழக்கம்போல் இந்த ஆண்டு மாட்டுவண்டி பந்தயம் கூடலூர் குமுளி பைபாஸ் சாலையில் சுமார் ஒன்றரை கிலோ மீட்டர் தூரத்திற்கு

ஐந்து வகையான மாடுகளுக்கு தனித்தனியாக பந்தயம் நடத்தப்பட்டது. கூடலூரில் நடைபெற்ற இந்த மாட்டு வண்டி பந்தயத்தில், கூடலூர், கம்பம் சுற்றுவட்டாரப் பகுதிகளில் இருந்தும் சுமார் 100-க்கும் மேற்பட்ட மாட்டு வண்டிகள் கலந்து கொண்டன.

வெற்றி பெற்றவர்களுக்கான கோப்பைகள்

இந்த மாட்டு வண்டி போட்டியை கம்பம் சட்டமன்றத் தொகுதி உறுப்பினர் ராமகிருஷ்ணன் மற்றும் ஆண்டிப்பட்டி சட்டமன்ற தொகுதி உறுப்பினர் மகாராஜன் துவங்கி வைத்தனர். இன்று காலை தொடங்கிய இந்த மாட்டு வண்டி பந்தயமானது, பூஞ்சிட்டு, தேன்சிட்டு, கரிச்சான் மாடு, நடுநாடு, பெரிய மாடு என ஐந்து வகையான மாடு வகைகளை கொண்டு, 5 பிரிவாக தனித்தனியாக நடைபெற்றது.

பரிசுத் தொகை

இதில் பெரியமாடு வகை பிரிவில் கலந்துகொண்டு வெற்றி பெறும் மாட்டின் உரிமையாளர்களுக்கு முதல் பரிசாக ₹50,000 ரூபாயும், இரண்டாம் பரிசாக ₹40,000 ரூபாயும், மூன்றாம் பரிசாக ₹30,000 ரூபாயும் வழங்கப்பட்டது.

நடுமாடு வகை பிரிவில் கலந்துகொண்டு வெற்றி பெறும் மாட்டின் உரிமையாளர்களுக்கு முதல் பரிசாக ₹40,000 ரூபாயும், இரண்டாம் பரிசாக ₹30,000ரூபாயும் மூன்றாம் பரிசாக ₹20,000 ரூபாயும் வழங்கப்பட்டது.

கரிச்சான் மாடு வகை பிரிவில் கலந்துகொண்டு வெற்றி பெறும் மாட்டின் உரிமையாளர்களுக்கு முதல் பரிசாக ₹30,000 ரூபாயும், இரண்டாம் பரிசாக ₹20,000 ரூபாயும் மூன்றாம் பரிசாக ₹10,000 ரூபாயும் வழங்கப்பட்டது.

பூஞ்சிட்டு மாடு வகை பிரிவில் கலந்துகொண்டு வெற்றி பெறும் மாட்டின் உரிமையாளர்களுக்கு முதல் பரிசாக ₹20,000 ரூபாயும், இரண்டாம் பரிசாக ₹10,000 ரூபாயும் மூன்றாம் பரிசாக ₹ 7,000 ரூபாயும் வழங்கப்பட்டது.

தேன்சிட்டு மாடு வகை பிரிவில் கலந்துகொண்டு வெற்றி பெறும் மாட்டின் உரிமையாளர்களுக்கு முதல் பரிசாக ₹10,000 ரூபாயும், இரண்டாம் பரிசாக ₹7,000 ரூபாயும் மூன்றாம் பரிசாக ₹5,000 ரூபாயும் வழங்கப்பட்டது.

அதே போல் மாட்டு வண்டி போட்டியில் பங்குபெற்று வெற்றி பெற்ற நபர்களுக்கு கூடலூர் பகுதியில் உள்ள முக்கிய பிரமுகர்கள், அரசியல் கட்சியை சேர்ந்த முக்கிய நிர்வாகிகள் பரிசு தொகை வழங்கினர். இந்த மாட்டு வண்டி போட்டியில் பங்கேற்க போட்டியாளர்கள் நுழைவுக் கட்டணமாக சில குறிப்பிட்ட தொகை கட்ட வேண்டியது குறிப்பிடத்தக்கது.

கூடலூர் குமுளி பைபாஸ் சாலையில் சீறி பாய்ந்த மாட்டுவண்டி பந்தயத்தை காண ஏராளமான பொதுமக்கள் மற்றும் பார்வையாளர்கள் குவிந்தனர். இந்த மாட்டு வண்டி பந்தயமானது பொது மக்களின் ஆரவாரத்துடனும் போலீசாரின் பாதுகாப்புடனும் நடைபெற்றது.

Published by:Karthick S
First published:

Tags: Local News, Theni