வைகை அணையை சுற்றியுள்ள 8கிராம விவசாய பொதுமக்கள் தங்கு தடையின்றி மின்பிடிக்க அனுமதிக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரே ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி தாலுகாவில் உள்ள வைகை அணை முன்னாள் முதலமைச்சர் காமராஜர் காலத்தில் 1959 ஆம் ஆண்டு கட்டப்பட்டது. அணை கட்டுவதற்காக சொக்கத்தேவன்பட்டி, பின்னதேவன், பற்றி சக்கரப்பட்டி, சாவடிப்பட்டி காமாகா பட்டி, குருவியம்மாள் புரம், வைகை கரட்டுப்பட்டி, வைகைபுதூர், ஆகிய 8 கிராமத்தினை சேர்ந்த விவசாயிகள் அணை கட்டுவதற்கு தங்களது விவசாய நிலங்களை ஒவ்வொரு கிராமத்தினரும் 200க்கும் மேற்பட்ட ஏக்கர் நிலங்களை அரசுக்கு கொடுத்தனர்.
அதனை தொடர்ந்து வைகை அணை கட்டி திறக்கப்பட்டு செயல்பாட்டுக்கு வந்த பிறகு 8 கிராமத்தினை சேர்ந்த விவசாய மக்கள் தங்களது விவசாய நிலத்தை அணை கட்டுவதற்காக கொடுத்துவிட்டதால் அன்றைய தமிழக அரசு எட்டு கிராமத்தினை சேர்ந்த விவசாய மக்கள் வைகை அணையில் மீன் பிடிப்பதற்கான உரிமையை வழங்கி கிராம விவசாய மக்களுக்கு வாழ்வாதாரத்தை கொடுத்து அதன் அடிப்படையில் அன்று முதல் இன்று வரை கிட்டத்தட்ட 60 ஆண்டுகளுக்கு மேலாக தொடர்ந்து விவசாய மக்கள் வைகை அணையில் மீன் பிடித்து தங்களது அன்றாட வாழ்வை நடத்தி வருகின்றனர்.
உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க
ஒவ்வொரு நாளும் பிடிக்கப்படும் மீன்களின் எடை அளவில் சரி பாதி அளவினை அரசாங்கத்திற்கு கொடுத்த பின்பு மீதி உள்ள மீன்களை விற்பனை செய்து அதில் கிடைக்கும் சொற்ப வருமானத்தின் மூலம் கிராம மக்கள் வாழ்ந்து வருகின்றனர். இந்த நிலையில் வைகை அணையின் தற்போதைய இணை இயக்குனர் 8 கிராமத்தினை சேர்ந்த விவசாய மக்களை மீன்பிடிக்க அனுமதிக்காமல் வைகைபுதூர் என்ற ஒரு கிராமத்தை சேர்ந்த மக்களை மட்டும் மீன்பிடிக்க அனுமதித்து ஒருதலை பட்சமாக செயல்பட்டு வருகிறார் என அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டி தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.
இதுகுறித்து வைகை அணை இணை இயக்குனரிடம் பலமுறை எடுத்துக் கூறியும் அனைத்து கிராமத்தை சேர்ந்த விவசாய மக்களையும் காலங்காலமாக மீன்பிடித்து வருவது போல் தொடர்ந்து அனுமதிக்க வேண்டுமென்று பலமுறை மனு அளித்தும் எந்த ஒரு நடவடிக்கையும் இதுவரை எடுக்கப்படவில்லை என்று 8 கிராமத்தை சேர்ந்த விவசாய மக்களும் தமிழ்த் தேசிய பார்வர்ட் பிளாக் கட்சியினரும் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Local News, Theni, Vaigai dam level