ஹோம் /தேனி /

தேனி மாவட்டத்தில் மக்கள் குறைகேட்கும் கூட்டம் - தேதி, இடங்கள் அறிவிப்பு

தேனி மாவட்டத்தில் மக்கள் குறைகேட்கும் கூட்டம் - தேதி, இடங்கள் அறிவிப்பு

ரேஷன் கடை

ரேஷன் கடை

Theni District | தேனி மாவட்டத்தில் ரேஷன் கடை தொடர்பாக மக்கள் குறைகேட்கும் கூட்டம் நடைபெறவுள்ள தேதி மற்றும் இடங்கள் பற்றிய விவரம் வெளியிடப்பட்டுள்ளது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Theni, India

மக்கள் குறைகேட்கும் கூட்டம் குறித்து தேனி மாவட்ட ஆட்சியர் முரளிதரன் செய்திக் குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், பொதுவினியோக திட்டத்தில் காணப்படும் குறைகளை களைவதற்கும், மக்களின் குறைகளை கேட்டு உடனுக்குடன் தீர்வு காணவும் ஒவ்வொரு மாதமும் 2ஆவது சனிக்கிழமையில் உணவுப்பொருள் வழங்கல் சம்பந்தமான பொதுமக்கள் குறைகேட்கும் கூட்டம் மற்றும் நுகர்வோர் விழிப்புணர்வு முகாம் நடத்தப்படும்.

அதன்படி வருகிற 12ஆம் தேதி பொதுமக்கள் குறைகேட்கும் கூட்டம் மற்றும் நுகர்வோர் விழிப்புணர்வு முகாம் மாவட்டத்தில் 5 இடங்களில் நடக்கிறது. பெரியகுளம் தாலுகாவில் கெங்குவார்பட்டி, தேனி தாலுகாவில் ஸ்ரீரெங்காபுரம், ஆண்டிப்பட்டி தாலுகாவில் தி.பொம்மிநாயக்கன்பட்டி, உத்தமபாளையம் தாலுகாவில் சீப்பாலக்கோட்டை, போடி தாலுகாவில் சிலமலை ஆகிய இடங்களில் கூட்டம் நடக்கிறது.

Must Read :திருச்சிக்கு நடுவில் இப்படி ஒரு அருவி இருக்கா?! - செலவே இல்லாமல் ஆனந்த குளியலுக்கு ஏற்ற சுற்றுலா தலம்!

இதில் பொதுமக்கள் கலந்துகொண்டு ரேஷன் கடைகளில் பொருட்கள் வினியோகம், ரேஷன் கார்டில் பெயர் சேர்த்தல், நீக்கம், திருத்தம், கடை மாற்றம், தொடர்பான கோரிக்கைகள், புகார்களை தெரிவிக்கலாம்.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

இத்தகைய புகார்கள், குறைபாடுகள் மீது 30 நாட்களுக்குள் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Published by:Suresh V
First published:

Tags: Local News, Ration card, Ration Shop, Theni