ஹோம் /தேனி /

தேனியில் ஆக்கிரமிப்பு வீடுகளிலிருந்து வெளியேற உத்தரவு.. திணறிய மக்கள்!

தேனியில் ஆக்கிரமிப்பு வீடுகளிலிருந்து வெளியேற உத்தரவு.. திணறிய மக்கள்!

போராட்டம் 

போராட்டம் 

தேனியில் நீண்ட நாளாக வசித்த வீட்டிலிருந்து வெளியேற உத்தரவு வந்ததைத் தொடர்ந்து பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

  • Local18
  • 1 minute read
  • Last Updated :
  • Theni | Theni Allinagaram

தேனி ஆட்சியர் அலுவலகம் நுழைவாயில் முன்பாக சுருளிபட்டி சாலையில் அமைந்துள்ள ஆக்கிரமிப்பு வீடுகளை அகற்ற எதிர்ப்பு தெரிவித்து பாதிக்கப்பட்டவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

தேனி மாவட்டம் கம்பம் அருகே உள்ள சுருளிபட்டி சாலையில் சுமார் 150 குடும்பத்திற்கும் மேல் பல ஆண்டுகளாக வீடுகட்டி குடியிருந்து வருகின்றனர். இந்த நிலையில் நகராட்சி நிர்வாகத்தினர் ஆக்கிரமிப்பில் கட்டப்பட்டுள்ள வீடுகளை விட்டு வெளியேறி வேறு இடத்திற்கு செல்லுமாறு தொடர்ந்து வலியுறுத்தி வந்த நிலையில்தற்போது திடீரென்று அந்த 150 குடியிருப்புகளையும் இடிக்க போவதாக அப்பகுதி மக்களுக்கு நகராட்சி சார்பில் தபால் அனுப்பப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இந்த தபாலைக் கண்டு அதிர்ச்சி அடைந்த அப்பகுதி மக்கள், சுமார் 50க்கும் மேற்பட்டோர் ஒன்றிணைந்து நகராட்சி அலுவலகத்தில் கேட்ட போது மாவட்ட நிர்வாகத்தின் அறிவுறுத்தலின் படி தபால் அனுப்பப்பட்டதாக கூறி உள்ளனர்.

ALSO READ |

இதனைத் தொடர்ந்து அப்பகுதி மக்கள் ஒன்றிணைந்து தேனி ஆட்சியர் முரளிதரன் அவர்களை சந்தித்து கோரிக்கை மனு வழங்க தேனி ஆட்சியர் அலுவலக வந்தனர்.

அப்போது தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் நுழைவாயில் முன்பாக ஆர்ப்பாட்டம் நடத்தினர். இந்தப் ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட நிர்வாகம் தங்களுக்கு மாற்று இடம் வழங்கும் வரை நாங்கள் இருக்கும் இடத்தை அகற்ற மாட்டோம் என வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் இது குறித்த கோரிக்கை மனுவினை தேனி ஆட்சியரை நேரில் சந்தித்து வழங்கினார்கள்.

First published:

Tags: Local News, Theni