ஹோம் /தேனி /

அதிகரிக்கும் தீண்டாமை கொடுமை.. தேனி பெரியகுளத்தில் போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள்..

அதிகரிக்கும் தீண்டாமை கொடுமை.. தேனி பெரியகுளத்தில் போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள்..

X
பெரியகுளம்

பெரியகுளம்

Theni News : தேனி ஊரக வளர்ச்சி முகமை அலுவலக முன்பாக, குள்ளபுரத்தை சேர்ந்த ஒரு சமுதாய மக்கள் தமிழ்நாடு சட்டப்பேரவையின் பொது கணக்கு குழு தலைவரை சந்தித்து மனு அளிக்க வந்த நிலையில் , காவல்துறை அதிகாரிகள் பொதுமக்களை தடுத்து சிறிது நேரம் கழித்து மனு அளிக்கக் கூறியதால் தரையில் அமர்ந்து பொதுமக்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். 

மேலும் படிக்கவும் ...
  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Theni, India

தேனி மாவட்டம் பெரியகுளம் ஊராட்சி ஒன்றியம் குள்ளபுரத்தை சேர்ந்த மாரிமுத்து(60), தலைமையிலான ஒரு சமுதாயத்தை சேர்ந்த மக்கள் இன்று மாலை சுமார் 5 மணியளவில் தேனி மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை அலுவலகத்திற்கு தமிழ்நாடு சட்டமன்ற பேரவை பொது கணக்கு குழு தலைவரை சந்தித்து கோரிக்கை மனு வழங்க வந்தனர். அப்போது அவர்களிடம் போலீசார் தற்போது ஆலோசனை கூட்டம் தொடங்கி நடைபெற்று வருகிறது. ஆகையால் சிறிது நேரம் கழித்து அழைத்து செல்வதாக தெரிவித்தனர்.

ஆனால் அவர்கள் தங்களை அழைத்து செல்லுங்கள் என்று வலியுறுத்தி திடீரென அலுவலகம் முன்பாக தரையில் அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டனர். தேவேந்திர குல வேளாளர் சமுதாயத்திற்கு பாத்தியப்பட்ட ஸ்ரீ மருது காளியம்மன் கோயிலில் வைகாசி மற்றும் கார்த்திகை மாதங்களில் குல வழிபாடு செய்து அந்த சமூகத்தை சேர்ந்த பொதுமக்கள் மாவிளக்கு மற்றும் முளைப்பாரி எடுத்து அரசு கிராம சாலை வழியாக செல்வது வழக்கம் எனவும், அப்பகுதி வழியாக இந்த சமூகத்தை சேர்ந்த பொதுமக்கள் செல்லக்கூடாது என மாற்று சமூகத்தை சேர்ந்த நபர்கள் பிரச்சனை செய்ததாகவும் கூறப்படுகிறது.

மேலும் குள்ளபுரம் பகுதியில் உள்ள மாரியம்மன் கோயிலில் வழிபாடு செய்ய அனுமதி அளிக்கப்படவில்லை எனவும், பொதுக் கோயிலை பூட்டு போட்டு பூட்டி வைத்துள்ளனர் எனவும் ஊர் பொதுமக்கள் குற்றம் சாட்டி, சாதி தீண்டாமையால் பொதுக்கோயிலில் வழிபாடு செய்யவிடாமல் பூட்டு போட்டு பூட்டியும்  வழக்கமாக செல்லும் சாலையில் சுதந்திரமாக பொதுமக்கள் செல்வதற்கு நடவடிக்கை எடுத்து தர வேண்டும் என்ற கோரிக்கை மனு அடங்கிய மனுவினை அளிக்க வந்ததாக ஊர் பொதுமக்கள் கூறினர்.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

இந்நிலையில், காவல்துறையினரின் பேச்சுவார்த்தைக்கு பின்பு தமிழ்நாடு சட்டமன்ற பேரவை பொது கணக்கு குழு தலைவர் செல்வப் பெருந்தகையை சந்தித்த பின் கலைந்து சென்றனர்.

First published:

Tags: Local News, Theni