அரசு கேபிள் டிவி நிறுவனம் கேபிள் ஆபரேட்டர்களிடம் அனலாக் நிலுவைத் தொகையை வசூலிப்பது தொடர்பாகவும் செயலாக்கம் இல்லாத இலவச செட்டாப் பாக்ஸ்களுக்கு பணம் கேட்டு நிர்பந்திப்பது தொடர்பாகஆட்சியர் அலுவலகம் முன்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்
தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாக இன்று தேனி மாவட்ட தமிழக கேபிள் டிவி ஆபரேட்டர்கள் நல சங்கம் சார்பாக பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. கடந்த 2017 ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில் தமிழகம் முழுவதும் டிஜிட்டல் முறை கேபிள் ஒளிபரப்பு முறை துவங்கப்பட்டது. அதற்கு முன்னதாக அனலாக் முறையில் தொலைக்காட்சிகளுக்கு ஒளிபரப்பு செய்யப்பட்டு வந்த நிலையில், அரசு சரியாக ஒளிபரப்பை வழங்காத காரணத்தினாலும் டிஜிட்டல் தொழில்நுட்பத்தால் ஈர்க்கப்படும் வாடிக்கையாளர்கள் தனியார் சேவையை நோக்கி நகர ஆரம்பித்தனர்.
இதன்காரணமாக அரசு கேபிள் டிவி உள்ளூர் ஆபரேட்டர்கள் மிகுந்த நஷ்டம் அடைந்தனர். இதனைத்தொடர்ந்து 2017 ஆம் ஆண்டு தமிழக அரசின் சார்பில் வாடிக்கையாளர்களுக்கு இலவச செட்டாப் பாக்ஸ் வழங்கும் திட்டம் தொடங்கப்பட்டது 2017 ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில் அனலாக் முறை நிறுத்தப்பட்டு டிஜிட்டல் முறை துவங்கப்பட்டது. இந்நிலையில் தற்போது அனலாக் முறை ஒளிபரப்புக்கு நிலுவை உள்ளதாக கூறி காவல்துறை மூலமாகவும் வருவாய்த்துறை அதிகாரிகள் மூலமாகவும் காலம் கடந்து ஆபரேடர்களை துன்புறுத்தி கடன்காரர்கள் போல் அரசு அதிகாரிகள் சித்தரிப்பது மன வேதனை அளிப்பதாக கூறுகின்றனர் கேபிள் டிவி ஆபரேட்டர்கள் .
இந்த நிலையில் கேபிள் டிவி ஆபரேட்டர்கள் பல்வேறு கோரிக்கைகளான காவல்துறை வருவாய்த்துறையை பயன்படுத்தி கேபிள் டிவி ஆபரேட்டர்களை குற்றவாளி போல் சித்தரிப்பதை நிறுத்த வேண்டும் என்று கூறியும், இலவசமாக செட்டாப் பாக்ஸ்களை பொதுமக்களுக்கு வழங்கிவிட்டு தற்போது செயல்படாத பாக்ஸ்களுக்கு அவற்றின் கிரையத்தொகை என்று சொல்லி பெருந்தொகையை கேபிள் டிவி ஆபரேட்டர்களிடம் வசூலிப்பதை நிறுத்த வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர்.
இதையும் படிங்க: இனி ராமேஸ்வரம் தீவின் அழகை இங்கே இருந்து ரசிக்கலாம்.. சுற்றுலா தலமாக அறிவிக்கப்பட்ட பாம்பன் லைட் ஹவுஸ்..!
அதேபோல, அரசு கேபிள் டிவி கார்ப்பரேஷன் ஆபரேட்டர்களுக்கு சிக்னலும் உபகரணங்களும் வழங்காமல் அவர்களின் மேல் சுமத்தப்பட்டுள்ள நிலுவைத் தொகையை ரத்து செய்யக் கோரியும், தமிழக முதல்வர் இந்த பிரச்சனையில் உடனடியாக தலையிட்டு தீர்வு காண வேண்டும் என்று கூறியும் கேபிள் டிவி ஆபரேட்டர்களின் நல வாரியத்தை செயல்படுத்துதல் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழக கேபிள் டிவி ஆபரேட்டர் பொதுநல சங்க தேனி மாவட்ட தலைவர் தமிழன் தலைமையில்மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்
பின்னர் தேனி மாவட்ட ஆட்சியர் முரளிதரனை நேரில் சந்தித்து தமிழக கேபிள் டிவி ஆபரேட்டர் பொதுநல சங்கம் சார்பாக கோரிக்கை மனுவை வழங்கினர். இந்த கோரிக்கை மனு வழங்கும் நிகழ்வில் 20-க்கும் மேற்பட்ட கேபிள் டிவி ஆபரேட்டர் நல சங்கத்தை சேர்ந்தவர்கள் உடன் இருந்தனர்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Local News, Tamil News, Theni