ஹோம் /தேனி /

தேனி மாவட்டத்தில் நாளை இந்த கிராமங்களில் மின் விநியோகம் தடை என அறிவிப்பு..

தேனி மாவட்டத்தில் நாளை இந்த கிராமங்களில் மின் விநியோகம் தடை என அறிவிப்பு..

மின்தடை அறிவிப்பு

மின்தடை அறிவிப்பு

Theni Power Cut Announcement | தேனி  மாவட்டம்  வடவீரநாயக்கன்பட்டி , சின்னக்காம்பட்டி  ஆகிய துணை மின் நிலையங்களில் நாளை (28-ம் தேதி - புதன் கிழமை)   மின் தடை செய்யப்படும் என்று மின் வாரியம் அறிவித்துள்ளது. 

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Theni, India

தேனி மாவட்டம் வடவீரநாயக்கன்பட்டி , சின்னக்காம்பட்டி ஆகிய துணை மின் நிலையங்களில்மாதாந்திர பராமரிப்பு பணிகாரமாக நாளை (28-ம் தேதி - புதன் கிழமை) மின் தடை செய்யப்படும் என மின்வாரியம் அறிவித்துள்ளது.

அப்போது மின்வாரியம் சார்பில், மின் கம்பங்கள், மின்மாற்றிகளில் உள்ள பழுது மற்றும் செடி கொடிகளை அகற்றம் பணி நடக்க இருக்கின்றது. மேலும், இதை சரிசெய்து சீரான மின் விநியோகம் செய்ய நடவடிக்கை மேற்கொள்ள பட இருக்கின்றது.

மேலும், மின் தடை செய்யப்படும் பகுதிகளில் குறித்து அறிவிக்கப்பட்டுள்ளது. அன்றயை தினம் பொது மக்கள் மின் தேவை இருப்பின் வேறு மாற்று ஏற்பாடுகளை செய்து கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மின்வாரிய ஊழியர்களுக்கு சிரமம் கொடுக்காமல் உங்கள் பணிகளை செய்யுமாறும், அவர்களுக்கு நல் ஒத்துழைப்பு தருமாறும் கேட்டுக்கொள்ளப்படுகிறது.

தேனி மாவட்டம் வடவீரநாயக்கன்பட்டி துணை மின் நிலையத்தில் காலை 10.00 மணிமுதல் பிற்பகல் 4 மணி வரை மின் தடை ஏற்படும் பகுதிகள்:

தேனி மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகம், தேனி கர்னல், பென்னிகுவிக் நினைவு நகராட்சிப் பேருந்து நிலைய வளாகம், சிவாஜி நகர், பாரஸ்ட் சாலை, சிட்கோ தொழிற்பேட்டை வளாகம், வடபுதுப்பட்டி, அரப்படித்தேவன்பட்டி ஆகிய பகுதிகளில் மின் விநியோகம் இருக்காது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இதேபோல், உதவி மின்செயற்பொறியாளர் ராஜேந்திரன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ஒட்டன்சத்திரம் அடுத்துள்ள சின்னக்காம்பட்டி துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுகின்றன.

இதையும் வாசிக்க: சுருளி, சின்ன சுருளி அருவிகளில் குளிக்க அனுமதி.. மக்கள் கூட்டம் கூடியது.! 

இதன் காரணமாக சின்னக்காம்பட்டி, மார்க்கம்பட்டி, இடையகோட்டை, கொ.கீரனூர், குத்திலுப்பை, சாமியாடிபுதூர், ஜ.வாடி ப்பட்டி, நரசிங்காபுரம், கொங்கபட்டி, ஜவ்வாது பட்டி, அண்ணாநகர், புல்லா க்கவுண்டனூர், நவக்கானி, சோழியப்பகவுண்டனூர், இ.அய்யம்பாளையம், நாரப்பநாயக்கன்பட்டி, மாம்பாறை, அத்தப்பன்பட்டி, எல்லப்பட்டி, பாறைப்பட்டி, இடையன் வலசு, பெருமாள்கவுண்டன்வலசு, இ.கல்லுப்பட்டி, கக்கர நாயக்கனூர், வலையப்பட்டி, நாகப்பன்பட்டி, குளிப்பட்டி, ஓடைப்பட்டி, ஜோகிப்பட்டி, கோமாளிப்பட்டி ஆகிய பகுதிகளில் நாளை காலை 9.00 மணி முதல் மாலை 5 மணி வரை மின்விநியோகம் இருக்காது என்று அவர் தெரிவித்துள்ளார்.

Published by:Siddharthan Ashokan
First published:

Tags: Local News, Power cut, Theni