ஹோம் /தேனி /

தேனி மாவட்டத்தின் இந்த கிராமங்களில் நாளை மின் விநியோகம் ரத்து..!!

தேனி மாவட்டத்தின் இந்த கிராமங்களில் நாளை மின் விநியோகம் ரத்து..!!

தேனி

தேனி

Theni District Power Cut | தேனி மாவட்டம் வீரபாண்டி, ராசிங்காபுரம், வைகை அணை ஆகிய  துணை மின் நிலையங்களில்  வியாழக்கிழமை (செப்.29) மின் தடை ஏற்படும் என்று மின் வாரியம் அறிவித்துள்ளது. 

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Theni, India

தேனி மாவட்டம் வீரபாண்டி, ராசிங்காபுரம், வைகை அணை ஆகிய துணை மின் நிலையங்களில் வியாழக் கிழமை (செப்.29) மின் தடை ஏற்படும் என்று மின் வாரியம் அறிவித்துள்ளது.

இதையும் படிங்க ; தேனியில் 30ம் தேதி விவசாயிகள் குறைதீர் முகாம்

வீரபாண்டி, ராசிங்காபுரம், வைகை அணை ஆகிய துணை மின் நிலையங்களில் நாளை மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெற உள்ளதால் இந்த அறிவிப்பு வெளியாகி உள்ளது.

அப்போது மின்வாரியம் சார்பில், மின் கம்பங்கள், மின்மாற்றிகளில் உள்ள பழுது மற்றும் செடி கொடிகளை அகற்றும் பணி நடக்க இருக்கிறது. மேலும், இதை சரிசெய்து சீரான மின் விநியோகம் செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்பட இருக்கிறது.

மேலும், மின் தடை செய்யப்படும் பகுதிகளில் குறித்து அறிவிக்கப்பட்டுள்ளது. அன்றயை தினம் பொதுமக்கள் மின் தேவை இருப்பின் வேறு மாற்று ஏற்பாடுகளை செய்து கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மின்வாரிய ஊழியர்களுக்கு சிரமம் கொடுக்காமல் உங்கள் பணிகளை செய்யுமாறும், அவர்களுக்கு நல் ஒத்துழைப்பு தருமாறும் கேட்டுக்கொள்ளப்படுகிறது.

மின் தடை ஏற்படும் பகுதிகள்:

வியாழக்கிழமை (செப்.29) காலை 10 மணி முதல் பிற்பகல் 4 மணி வரை வீரபாண்டி, போடேந்திரபுரம், காமராஜபுரம், மாணிக்காபுரம், உப்புக்கோட்டை , டொம்புச்சேரி, பத்திரகாளிபுரம், உப்பாா்பபாா்பட்டி , சடையால்பட்டி , ராசிங்காபுரம், சிலமலை, டி.ரங்கநாதபுரம், சங்கராபுரம், சூலப்புரம், பொட்டிட் ப்புரம், சில்லமரத்துப்பட்டி ஆகிய பகுதிகளில் மின் விநியோகம் இருக்காது என்று தேனி மின் வாரிய செயற்பொறியாளா் பிரகலாதன்தெரிவித்துள்ளார்.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

வைகை அணை பகுதிகளில் மின் தடை:  வைகை அணை, ஜெயமங்கலம், குள்ளப்புரம், வைகை புதூா், ஜம்புலிபுத்தூா் , மருகால்பட்டி மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் காலை 10 மணி முதல் பிற்பகல் பகல் 2 மணி வரை மின்தடை செய்யப்படும் என்று பெரியகுளம் கோட்ட செயற்பொறியாளா் ப.பாலபூமி தெரிவித்துள்ளார்.

Published by:Karthi K
First published:

Tags: Local News, Theni