ஹோம் /தேனி /

தேனி மாவட்டத்தில் எந்தெந்த பகுதிகளில் நாளை மின் தடை தெரியுமா?

தேனி மாவட்டத்தில் எந்தெந்த பகுதிகளில் நாளை மின் தடை தெரியுமா?

தேனி

தேனி

Theni Power Cut Announcement | தேனி மாவட்டம் தேவாரம் துணைமின் நிலையத்தில்  நாளை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால் இந்த அறிவிப்பு வெளியாகி உள்ளது.  

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Theni, India

தேனி மாவட்டம் தேவாரம் துணைமின் நிலையத்தில் வெள்ளிக்கிழமை ( செப். 30) மின் தடை ஏற்படும் என்று மின் வாரியம் அறிவித்துள்ளது.

தேனி மாவட்டம் தேவாரம் துணைமின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால் இந்த அறிவிப்பு வெளியாகி உள்ளது.

அப்போது மின்வாரியம் சார்பில், மின் கம்பங்கள், மின்மாற்றிகளில் உள்ள பழுது மற்றும் செடி கொடிகளை அகற்றும் பணி நடக்க இருக்கிறது. மேலும், இதை சரிசெய்து சீரான மின் விநியோகம் செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்பட இருக்கிறது.

இதையும் படிங்க : விவசாயம், குடிநீருக்காக வைகையில் தண்ணீர் திறப்பு - மதுரை மக்கள் மகிழ்ச்சி

மேலும், மின் தடை செய்யப்படும் பகுதிகளில் குறித்து அறிவிக்கப்பட்டுள்ளது. அன்றயை தினம் பொதுமக்கள் மின் தேவை இருப்பின் வேறு மாற்று ஏற்பாடுகளை செய்து கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மின்வாரிய ஊழியர்களுக்கு சிரமம் கொடுக்காமல் உங்கள் பணிகளை செய்யுமாறும், அவர்களுக்கு நல் ஒத்துழைப்பு தருமாறும் கேட்டுக்கொள்ளப்படுகிறது.

மின் தடை செய்யப்படும் பகுதிகள்:

தேவாரம், மீனாட்சிபுரம், மூனாண்டிபட்டி , போ.ரங்கநாதபுரம், லட்சுமிநாயக்கன்பட்டி , தே.சிந்தலைச்சேரி, பொம்மிநாயக்கன்பட்டி , தம்மிநாயக்கன்பட்டி , தே.சொக்கலிங்கபுரம், செல்லாயிபுரம், மேட்டுப்பட்டி, கிருஷ்ணம்பட்டி , ஓவுலாபுரம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகள்.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

எனவே காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை மின் விநியோகம் இருக்காது என்று தேனி மின் வாரிய செயற்பொறியாளா் பிரகலாதன் தெரிவித்துள்ளார்.

Published by:Karthi K
First published:

Tags: Local News, Theni