ஹோம் /தேனி /

தேனி மாவட்டத்தின் இந்த பகுதிகளில் அடுத்த 2 நாட்களுக்கு மின்தடை

தேனி மாவட்டத்தின் இந்த பகுதிகளில் அடுத்த 2 நாட்களுக்கு மின்தடை

தேனியில் மின்தடை அறிவிப்பு

தேனியில் மின்தடை அறிவிப்பு

Theni PowerCut Areas | தேனி மாவட்டம் மதுராபுரி துணை மின் நிலையத்தில் உயர் அழுத்த மின் பாதையில் பராமரிப்பு பணி காரணமாக கோம்பை, அனுகிரகாநகர், மணிநகர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் 2 நாட்களுக்கு மின்தடை செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்கவும் ...
  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Theni, India

தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே உள்ள மதுராபுரி துணை மின் நிலையத்தில் உயர் அழுத்த மின் பாதையில் பராமரிப்பு பணிகள் நாளை (வெள்ளிக்கிழமை) மற்றும் நாளை மறுநாள் (சனிக்கிழமை) நடைபெற உள்ளது.

அப்போது, மின்வாரியம் சார்பில், மின் கம்பங்கள், மின்மாற்றிகளில் உள்ள பழுது மற்றும் செடி கொடிகளை அகற்றம் பணி நடக்க இருக்கிறது. மேலும், இதை சரிசெய்து பின்னர் சீரான மின் விநியோகம் செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்பட இருக்கிறது.

Must Read :விழுப்புரத்தில் பிறந்து நடிப்புக்கே இலக்கணம் தந்து... சர்வதேச விருதை வென்ற நடிகர் - இவர் யார் தெரியுமா?

எனவே, அடுதத இரண்டு நாட்களில் மின்தடை செய்யப்படும் நேரங்களில் மின் தேவை இருப்பின் மாற்று ஏற்பாடுகளை செய்து கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. அத்துடன், மின்வாரிய ஊழியர்களுக்கு சிரமம் கொடுக்காமல் பணிகளை செய்யுமாறும், அவர்களுக்கு ஒத்துழைப்பு தருமாறும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

அதன்படி, மதுராபுரி, பெரியகுளம்-தேனி மெயின் சாலை பகுதி (மதுராபுரி), அன்னஞ்சி, கோம்பை, அனுகிரகாநகர், மணிநகர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் நாளையும், நாளை மறுநாளும் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்சாரம் நிறுத்தம் செய்யப்பட இருப்பதாக பெரியகுளம் மின்வாரிய செயற்பொறியாளர் பாலபூமி தெரிவித்துள்ளார்.

Published by:Suresh V
First published:

Tags: Local News, Power cut, Power Shutdown, Theni