முகப்பு /தேனி /

தேனியில் நாளை மின்தடை அறிவிப்பு.. எந்தெந்த பகுதிகள் தெரியுமா?

தேனியில் நாளை மின்தடை அறிவிப்பு.. எந்தெந்த பகுதிகள் தெரியுமா?

மின் தடை

மின் தடை

Theni powercut | தேனி மாவட்டத்தில் நாளை மின் தடை செய்யப்படும் பகுதிகள் அறிவிக்கப்பட்டுள்ளது.

  • Last Updated :
  • Theni Allinagaram, India

தேனி மாவட்டம், எரசை மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமங்களில் நாளை (10/05/23) காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை பராமரிப்பு பணிகள் காரணமாக மின் வினியோகம் இருக்காது என அறிவிப்பு வெளியாகி உள்ளது.

மின்தடை :-

தேனி மாவட்டத்தில் உள்ள மின் நிலையங்களில் மாதத்திற்கு ஒரு முறை பராமரிப்பு பணிகள் நடைபெறுவது வழக்கம். அதன்படி, சின்னமனூர் அருகே உள்ள சின்ன ஓவுலாபுரம் துணை மின் நிலையத்தில் மே 10 ஆம் தேதி நாளை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது.

இந்த பராமரிப்பு பணிகள் காரணமாக, ஊத்துப்பட்டி , பூசாரி கவுண்டன்பட்டி, எரசக்கநாயக்கனூர், இந்திரா காலனி, கன்னிசேர்வைப்பட்டி , ராமசாமி நாயக்கன் பட்டி, முத்தலாபுரம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் காலை 10 மணி முதல் மாலை 4.00 மணி வரையும் மின்சாரம் நிறுத்தப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ALSO READ | விவசாயத்திற்கு பயன்படும் சோலார் உலர்த்தி.. ஆர்வம் காட்டும் தேனி விவசாயிகள்!

எனவே, பொதுமக்கள் மின் தேவை இருப்பின் மாற்று ஏற்பாடுகளை செய்து கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. அத்துடன் மின்வாரிய ஊழியர்களுக்கு சிரமம் கொடுக்காமல் பணிகளை செய்யுமாறும், அவர்களுக்கு உரிய ஒத்துழைப்பு தருமாறும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

மேலும் எரசக்கநாயக்கனூர் மற்றும் அதனை சுற்றியுள்ள கிராம மக்கள் தங்களுக்கு தேவையான முன்னெச்சரிக்கை ஏற்பாடுகளை செய்து கொள்ளும்படியும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

top videos

    உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

    First published:

    Tags: Local News, Power cut, Power Shutdown, Theni