முகப்பு /தேனி /

தேனி மாவட்ட மக்களே உஷார்.... நாளை இங்கெல்லாம் மின் தடை

தேனி மாவட்ட மக்களே உஷார்.... நாளை இங்கெல்லாம் மின் தடை

மின் தடை  

மின் தடை  

Theni district | தேனி மாவட்டத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக நாளை (சனிக் கிழமை) மின் தடை செய்யப்படும் பகுதிகள் பற்றிய விவரம் அறிவிக்கப்பட்டுள்ளது.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Theni, India

தேனி மாவட்டம் மார்க்கையன்கோட்டை, ஆண்டிப்பட்டி மற்றும் போடி துணை மின் நிலையத்தில் பராமரிப்பு பணிகள் நடைபெற இருப்பதால் நாளை (04-02-2023) இந்த பகுதிகளில் மின் வினியோகம் இருக்காது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனவே, பொதுமக்கள் மின் தேவை இருப்பின் மாற்று ஏற்பாடுகளை செய்து கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. அத்துடன் மின்வாரிய ஊழியர்களுக்கு சிரமம் கொடுக்காமல் பணிகளை செய்யுமாறும், அவர்களுக்கு உரிய ஒத்துழைப்பு தருமாறும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

அதன்படி, மார்க்கையன்கோட்டை, போடி துணை மின் நிலையத்திற்கு உட்பட்ட பகுதிகளில் சனிக்கிழமை காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை மின்தடை செய்யப்படும் என தேனி மின்வாரிய செயற்பொறியாளர் பிரகலாதன் மற்றும் சின்னமனூர் மின்வாரிய செயற்பொறியாளர் ரமேசுகுமார் ஆகியோர் தெரிவித்துள்ளனர்.

மின் தடை பகுதிகள்:

மார்க்கையன்கோட்டை துணை மின் நிலையத்திற்கு உட்பட்ட சின்னமனூர், மார்க்கையன்கோட்டை, அய்யம்பட்டி, புலிகுத்தி, மேலசிந்தலைச்சேரி, கீழசிந்தலைச்சேரி, பல்லவராயன்பட்டி, குண்டல்நாயக்கன்பட்டி, அம்மாபட்டி மற்றும் அதனை சுற்றியுள்ள கிராம பகுதிகளில் நாளை மின்தடை செய்யப்படுகிறது.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

இதேபோல போ.அணைக்கரைப்பட்டி, போ.மீனாட்சிபுரம், குரங்கணி, போடி நகர் பகுதிகள் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளிலும், பெரியகுளம் மின்கோட்டத்திற்கு உட்பட்ட ஆண்டிப்பட்டி வடக்கு பிரிவு ஜம்புலிபுத்தூர் பீடரில் உள்ள மின் பாதையில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளது.

Must Read : கோவை ஜங்ஷன் ரயில் நிலையத்திற்கு 150 வயது... இந்த ரயில் நிலையத்திற்கு இத்தனை சிறப்புகளா!

இதனால், ஆண்டிப்பட்டி அருகே உள்ள தர்மத்துப்பட்டி, ராஜப்பன்கோட்டை, தாதனூர், நடுக்கோட்டை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளிள் சனிக்கிழமை காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்சாரம் நிறுத்தப்படும் என பெரியகுளம் கோட்ட மின்வாரிய செயற்பொறியாளர் பாலபூமி தெரிவித்துள்ளார்.

First published:

Tags: Local News, Power cut, Power Shutdown, Theni