ஹோம் /தேனி /

தேனி கைலாசநாதர் மலை கோவிலில் பவுர்ணமி கிரிவலம் - சிறப்புகள் என்ன?

தேனி கைலாசநாதர் மலை கோவிலில் பவுர்ணமி கிரிவலம் - சிறப்புகள் என்ன?

 கைலாசநாதர் கோவில், கைலாசபட்டி

கைலாசநாதர் கோவில், கைலாசபட்டி

Pournami Girivalam | தேனி மாவட்டம் பெரியகுளத்திற்கு அருகேயுள்ள கைலாசபட்டி கைலாசநாதர் மலை கோவிலில் பவுர்ணமி கிரிவலம் நடைபெறவுள்ளது. அந்த கோவிலைப் பற்றியும், அதன் சிறப்புகளையும் அறிந்து கொள்வோம்.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Theni, India

தேனியில் இருந்து 16 கிலோ மீட்டர் தூரத்திலும், பெரியகுளத்திலிருந்து 6 கிலோ மீட்டர் தொலைவிலும் இருக்கிறது கைலாசபட்டி கைலாசநாதர் திருக்கோவில். மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் உள்ள இந்த கோவிலுக்கு ஏராளமான பக்தர்கள் வந்து செல்வது வழக்கம்.

இந்த கோவிலானது, முதலாம் மாறவர்மன் சுந்தரபாண்டியனால் கட்டப்பட்டு முழுமை அடையாமல் நின்றுபோனது. புதியதாக ஐந்து நிலைகள் கொண்ட ராஜகோபுரம் முன் மண்டபம், மூலகணபதி சப்தமாதர்கள், இச்சாசக்தி, கிரியாசக்தி, வள்ளி - தெய்வானையுடன் சுப்பிரமணியர், அர்த்தநாரீஸ்வரர், திருத்தியமைக்கப்பட்ட மூலஸ்தானம் என புதிய வடிவில் கட்டி முடிக்கப்பட்டு மகா கும்பாபிஷேகமும் நடைபெற்றது. இங்பே திருவண்ணாமலை போன்று கார்த்திகை நாளில் தீபம் எற்றுதலும், பக்தர்கள் கிரிவலம் செல்வதும் வழக்கம்.

இந்த கிரிவல பாதை மலையைச் சுற்றிலும் சுமார் 3 கி.மீ தூரம் அமைந்துள்ளது. கிரிவலப் பாதையில் எட்டு திசைகளிலும், இந்திரலிங்கம், அக்னி லிங்கம், இமயலிங்கம், நிருருதிலிங்கம், வாயுலிங்கம், வருணலிங்கம், குபேர லிங்கம், ஈசான்ய லிங்கம் என்று அஷ்டதிக்கு லிங்கங்கள் இருக்கின்றன. இந்த மலையைச் சுற்றிலும், ஓமச்செடிகளும், மூலிகைகளும் நிறைந்திருப்பதால், கிரிவலம் வரும்போது, சுவாசிக்கும் காற்றால் உடல் நோய்கள் நீங்கும் என்று பக்தர்கள் நம்புகின்றனர்.

கைலாசபட்டி, கைலாசநாதர் கோவிலில்

இந்நிலையில், சித்திரை முதல் நாள், பெரிய குளம் தீர்த்தத் தொட்டியில் இருந்து 108 குடங்களில் கொண்டு வரும் தண்நீரால் கைலாசநாதருக்கு அபிஷேகம் செய்யப்படுவது வழக்கம். இந்த பகுதியில், சட்டமுனி சித்தர், மௌனகுருசாமி சித்தர் உள்ளிட்ட சித்தர்கள் வாழ்ந்து வந்ததாகவும் அவர்கள் இந்த கோவிலில் வணங்கி சென்றதாக சொல்லப்படுகிறது.

Must Read :மேட்டுப்பாளையம் வனபத்ரகாளியம்மன் கோவிலில் இத்தனை சூப்பர் ஹிட் சினிமா காட்சிகளை எடுத்துள்ளார்களா?

இந்நிலையில், கைலாசப்பட்டி பகுதியில் உள்ள இந்த கைலாசநாதர் மலை கோவிலில் மாந்தோறும் பவுர்ணமி நாளில் கிரிவலம் சிறப்பாக நடைபெற்று வருகிறது. திருவண்ணாமலைக்கு அடுத்தாற்போல் இந்த மலைக் கோவிலில் கிரிவலம் செல்வது சிறப்புக்கு உரியது என்று பக்தர்கள் கூறுகின்றனர்.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

இந்நிலையில் இன்று (திங்கட்கிழமை) காலை அன்னாபிஷேகம் நிகழ்ச்சியும், மாலை பவுர்ணமி கிரிவலம் மற்றும் அன்னதானம் நிகழ்ச்சியும் நடைபெற இருப்பதாக கோவில் பராமரிப்பு குழுவினர் தெரிவித்துள்ளனர்.

Published by:Suresh V
First published:

Tags: Local News, Temple, Theni