ஹோம் /தேனி /

இதெல்லாம் சின்ன வயசுல சாப்பிட்டிருக்கீங்களா? தேனியில் பிரபலமடைந்து வரும் 90ஸ் கிட்ஸ் மிட்டாய் கடைக்கு ஒரு விசிட் அடிங்க..

இதெல்லாம் சின்ன வயசுல சாப்பிட்டிருக்கீங்களா? தேனியில் பிரபலமடைந்து வரும் 90ஸ் கிட்ஸ் மிட்டாய் கடைக்கு ஒரு விசிட் அடிங்க..

தேனி

தேனி : 90ஸ் கிட்ஸ் மிட்டாய் கடை

Theni 90s Kids Shop | தேனி மாவட்டத்தில் 90s மற்றும் 80s கால ரக மிட்டாய் கடை நடத்தி, மக்களிடம் நல்ல வரவேற்பு பெரும் தேனி இளைஞர்..

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Theni Allinagaram | Theni

தற்போது உள்ள கால கட்டங்களில் 2k கிட்ஸ் களின் ஆதிக்கம் அதிகமாக இருந்தாலும், 90s கிட்ஸ் களின் காலமானது மிகவும் சிறப்பு வாய்ந்ததாகவே உள்ளது எனலாம். தற்போது டைரி மில்க், பைவ் ஸ்டார், பிரீ பயர், என இந்த காலம் நாகரிகமாக இருந்தாலும், அந்த காலத்தில் (90s ) இருந்த மிட்டாய்களான

குச்சிமிட்டாய், குருவி ரொட்டி, பேப்பர் மிட்டாய், கமரக்கட்டு போல வராது என்கிறனர் 90s மற்றும் 80s, கிட்ஸ்கள்.

90s, 80s கிட்ஸ்களுக்கான மிட்டாய் கடை :-

தேனி மாவட்டத்தில் தேனி நகரில் பழைய பத்தர அலுவலகம் பின்புறம், 90s, 80s கிட்ஸ்களுக்கான மிட்டாய் கடை ஒன்றை நடத்தி வருகிறார் வள்ளிக்கண்ணன் என்ற இளைஞர். டிப்ளமோ மெக்கானிகல் படித்துள்ள இவர் கொரோனா காலகட்டத்தின் போது ஏதேனும் சொந்த தொழில் செய்ய வேண்டும் என எண்ணி தனது நண்பரின் யோசனையால் 90s, 80s கிட்ஸ்களுக்கு பிடித்த மிட்டாய் கடை தொழிலைக் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கியுள்ளார்.

90ஸ் கிட்ஸ் மிட்டாய் கடை

90s, 80s காலகட்டத்தில் மிகவும் பிரபலம் அடைந்த குச்சிமிட்டாய் குருவி ரொட்டி காசு மிட்டாய் , ஜவ்வு மிட்டாய் , பொரி உருண்டை , மம்மி டாடி , பேப்பர் மிட்டாய், கமரக்கட்டு, புளிப்பு மிட்டாய் உள்ளிட்ட பல்வேறு வகையான மிட்டாய் வகைகளும் , 90s, 80s காலகட்டத்தில் குழந்தைகள் அதிகம் பயன்படுத்தும் விளையாட்டுப் பொருட்களையும் விற்பனை செய்து வருகிறார். கோயம்புத்தூர் சேலம் தேனி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து 90s, 80s காலகட்டத்தில் பயன்படுத்தப்பட்ட மிட்டாய் களை ஒவ்வொரு பகுதியிலிருந்தும் ஒவ்வொரு பொருளாக வாங்கி தொழில் செய்து வருகிறார்.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

மக்களிடையே வரவேற்பு :-

இது குறித்து வள்ளிக்கணன் கூறுகையில் , \" எனக்கு புதியதாக ஏதேனும் ஒரு தொழில் செய்ய வேண்டும் என்ற ஆர்வம் இருந்து வந்தது, எனது நண்பனின் அறிவுரைப் படி எனக்கு இந்த 80s மற்றும் 90s கிட்ஸ்களுக்கான மிட்டாய் கடை தற்போது தேனியில் இல்லை, எனவே இதனை புதிய முயற்சியாக இத் தொழிலை ஆரம்பித்தேன் \" என்றார்.

90ஸ் கிட்ஸ் மிட்டாய் கடை

90s, 80s கிட்ஸ்களுக்கான மிட்டாய் மற்றும் விளையாட்டு பொருட்கள் எங்கும் தற்போது கிடைக்காத நிலையில், தேனி மாவட்டத்தில் புதியதாக 90s, 80s கிட்ஸ்களுக்கான மிட்டாய் கடை உள்ளது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளதாகவும், மீண்டும் பழைய நினைவுகள் வெளிப்படுவதாகவும் கூறி, விரும்பி வாங்கிச் செல்கின்றனர்

Published by:Arun
First published:

Tags: Local News, Theni